தேவையில்லாமல் எரிவாயு இருப்புகளைப் பதுக்க வேண்டாம் – லிட்ரோ நிறுவனம்

சந்தையில் தேவையில்லாமல் எரிவாயு இருப்புகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு இருப்புகளை தேவையில்லாமல் பதுக்கி வைக்கும் வர்த்தக முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,எரிவாயு […]
எல்லை மீறி மீன்பிடித்த மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னாரிற்குத் தெற்கு திசையில் இந்நாட்டு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். இந்த இந்திய மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் குழுவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வு […]
போதைப்பொருள் கடத்தலைக் காட்டிக்கொடுத்தவரின் தலையைத் துண்டிக்கும் சதித்திட்டம் அம்பலமாகியது

பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன் வைக்கும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கிரிந்த கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மேல் மாகாண வடக்கு […]
அறுந்து விழுந்த இரும்புப் பாலம் சீர் செய்யப்படவில்லை: பிள்ளைகளை சுமந்து ஆற்றை கடக்கும் பெற்றோர்!

கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா – லிந்துலை, மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரும்பு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது இதனால் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். குறிப்பாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ் இயங்கும் மிளகுசேனை, ஊட்டுவெளி மற்றும் சென்டறர்கிளாஸ் போன்ற பகுதிகளில் வாழும் 800 இற்கும் மேற்பட்ட […]
யாழ்.சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி!

இன்று (24) யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – ஊரெழு பகுதியை சேர்ந்த வையித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவர் நேற்று (23) இரவு மாடியில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் […]
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

ருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (24) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, இந்திய துணைத் தூதரக அதிகாரி சி. எஸ். றம்மியா […]
சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்தவர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் வின்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், குறித்த இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கொன குடாவ மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் இவ்வாறு வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, களுத்துறை மீன்பிடிப் பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்று சந்தேகநபரைத் தமது பொறுப்பில் எடுத்து, பாயாகல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (23) மாலை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், […]
கார் ஒன்றில் மோதிய சிறுமி பலி

கம்பளை, எத்கால நாகொல்ல பகுதியில் தனது தாய் மற்றும் 7 வயது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமி, கார் ஒன்றில் மோதி பலியான சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் நாவலபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஸங்க நந்தன குலதுங்கவின் மகளான நிசாரா கெனுலி குலதுங்க என்ற முன்பள்ளிச் சிறுமி ஆவார். தனது முன்பள்ளி ஆசிரியையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகத் தாய் மற்றும் சகோதரனுடன் மாவத்துர பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, […]
காவல் குடிசைக்கு ஏறியபோது ஏணி முறிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு!
அநுராதபுரம் – கஹடகஸ்திகிலிய பகுதியில் மரம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏறும்போது ஏணி முறிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (23) பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஏணி திடீரென முறிந்து விழுந்துள்ளது. இதன்போது ஏணியிலிருந்து விழுந்த அவர், பலத்த காயமடைந்த நிலையில் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர்!

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் ‘சிந்தனை தினத்தை’ (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, சாரணர் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பேடன் பவல் பிரபுவின் சிலைக்குப் பிரதமர் மலரஞ்சலி செலுத்தித் தனது மரியாதையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு […]