யாழ். போதனா வைத்தியசாலை திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறுப்பு நிற HONDA ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் […]

கம்பஹா வைத்தியசாலையில் இளம் பெண் திடீரென மரணம்!

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெண்ணின் நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த செனுரியின் மரண விசாரணையில் அவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் சுகயீனம் […]

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கு கோடிக்கணக்கில் செலவானதா?

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் (11,079,075.50)என செலவு காட்டப்பட்டுள்ளது. இதன்படி, தை மாதம் பொங்கல் தினத்தில் வட மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை ஆரம்பித்து வைத்த நிலையில், அன்று மாலை வேலனையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டார். இதனைத் […]

டொராண்டோவில் `கன்டோ’ விலைகள் சரிவு: பெரும் நெருக்கடியில் முன்பணம் செலுத்தியவர்கள்!

கட்டிடப்படுவதற்கு முன்பே வீடு வாங்குவது, உயர்ந்த விலை சந்தையில் முன்னிலைபெற உதவும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்த வீடுவாங்குனர்கள், சொத்து மதிப்புகள் குறையும் போது என்ன நடக்கிறது என்பதை இப்போது அனுபவித்து வருகிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவில் — குறிப்பாக டொராண்டோ போன்ற `கன்டோ’ சந்தைகளில் — சொத்து மதிப்பு குறைந்தால், அந்த இழப்பை டெவலப்பர்களும் கடனளிப்பவர்களும் எளிதில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கமாட்டார்கள் என்பதை அதிகமானோர் கடினமான அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் […]

பார்ட்டி கியூபெகோயிஸ் நான்காவது இடைத்தேர்தல் வெற்றியைப் பதிவு செய்தது!

நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற சிகௌடிமி (Chicoutimi) இடைத்தேர்தலில் பார்ட்டி கியூபெகோயிஸ் வெற்றி பெற்றுள்ளது. மாகாண பொதுத் தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கும் குறைவான காலம் மட்டுமே உள்ள நிலையில், கட்சி தொடர்ந்து நான்காவது இடைத்தேர்தலில் வெற்றி கண்டுள்ளது. மேரி-கார்லின் லாஃப்லாம் 45 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.கியூபெக்கின் கன்சர்வேடிவ் கட்சி( Conservative Party of Quebec) கட்சியின் கத்தரின் மோரிசெட் 26 சதவீதத்திற்கும் சிறிது மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். மொத்தம் 142 வாக்குச்சாவடிகளின் முடிவுகள் வெளியான பின்னர் இந்த […]

கனடாவில் பொதுச்சேவை ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகப் பணியாற்றவேண்டும்!

கனடாவில் கோடை காலம் தொடங்கியவுடன் பொதுச்சேவை செய்யும் ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் பணியாற்றுவதற்கு அலுவலகங்களுக்குச் செல்லவேண்டும் என அந்நாட்டு அரசு விதித்துள்ள திட்டம் குறித்து வெவ்வேறு விதமான கருத்துக்கள் தற்போது வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கனடாவின் திறைசேரி வாரியத் தலைவர் ஷஃப்கத் அலி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் அலுவலகத்துக்கு வரும் பணியாளர்களுக்கு போதியளவிலான பணியிடங்கள் உள்ளன எனவும். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் எப்படி அவர்களை அழைக்க முற்படுவோம் எனவும் கருத்துப் பகிர்ந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை ஷஃப்கத் […]

ரணிலின் மனைவிக்கு ஆதரவு அதிகரிப்பு!

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) வழங்கிய அழைப்பாணை தொடர்பாக கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவரது நீண்டகால சுயாதீன கல்வி பங்களிப்புகள் மற்றும் சர்வதேச ரீதியிலான அங்கீகாரங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்த நடவடிக்கை தொடர்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான சட்ட நடைமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கும்போது சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு, எவருக்கும் அரசியல் நோக்கில் பழிவாங்கல் ஏற்படாத வகையில் […]

மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாலுள்ள கடைகள் அகற்றல்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணியை முன்னிட்டு நிலையத்திற்கு முன்னால் கட்டப்பட்டிருந்த தற்காலிக கடைகள் இடித்து இன்று (24.02.2026) அகற்றப்பட்டுள்ளன. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்த எதிர்ப்பை மீறி கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இவை சட்டத்து புறம்பாக அமைக்கப்பட்ட கடைகளாகும். மத்திய பேருந்து நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்ட பின்னர் இவ்வாறான தற்காலிக கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் வழங்கப்படவுள்ளன. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் […]

பலவீனமடையும் காற்றழுத்த தாழ்வுநிலை!

இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்கம் காரணமாக, கடல் பகுதிகளில் பலத்த மழை […]

எங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை – மனோ கணேசன்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் எமக்கும் இடையிலானது ஒரு தேர்தல் கூட்டணி உடன்படிக்கை மாத்திரமே, அவர் எமது கட்சித் தலைவர் அல்ல. எனவே எங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நகர்வுகள் மற்றும் கூட்டணியின் சுதந்திரத் தன்மை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் முற்போக்குக் கூட்டணி எமது […]