வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் சமூகத்தினருக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் 2.00 மணியளவில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் கிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவிழக்கும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வரைபடத்தில் […]

நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது: பேராசிரியர் டபிள்யூ.டி.ஏ.எஸ். ரொட்ரிகோ (தலைவர்) – மின் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் கலாநிதி என்.ஏ.ஐ.டி. நிஸ்ஸங்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் கலாநிதி ஐ.யூ. அத்தநாயக்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, […]

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சம் என்ற எல்லையைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் பெப்ரவரி 22ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 505,751 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 2026 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 228,424 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு […]

நற்சான்றிதழ்களைக் கையளித்த இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் !

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்த இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் ! இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்தனர். கியூபா குடியரசின் புதிய தூதுவர், கொழும்பைத் தளமாகக் கொண்ட கட்டார் இராச்சியத்தின் புதிய தூதுவர் மற்றும் புதுடில்லியைத் தளமாகக் கொண்ட ஸ்லோவேனியா குடியரசின் தூதுவர் ஆகியோரே இவ்வாறு தமது நற்சான்றிதழ்களைக் கையளித்துள்ளனர். அதற்கமைய, கொழும்பைத் தளமாகக் கொண்ட கியூபா குடியரசின் புதிய […]

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக் கொலை : 80 சதவீத விசாரணைகள் நிறைவு!

க்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இது தொடர்பான விபரங்களை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது, கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில், மூன்று நாட்களுக்குள் […]

பீட்டர் மண்டேல்சன் லண்டனில் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுப் பதவியில் இருந்தபோது தவறான நடத்தை மற்றும் தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மண்டேல்சனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்களுக்குப் பிறகு, கடந்த செப்டம்பரில் மண்டேல்சன் தனது தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

‘டைகர் கிங்டம்’ பூங்காவில் 72 புலிகள் திடீர் மரணம்!

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த இரண்டு வார காலப்பகுதியில் மாத்திரம் 72 புலிகள் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் கால்நடை உற்பத்தி திணைக்களம் நடத்திய முதற்கட்ட சோதனையில், ‘கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ எனும் மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்றினாலேயே இப்புலிகள் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக நாய்கள் மத்தியில் காணப்படும் இந்த வைரஸ், புலிகளின் சுவாசப்பை, வயிறு மற்றும் நரம்பு மண்டலத்தை கடுமையாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்துவதாகத் […]

அமெரிக்காவில் பனிப்புயல்: 5000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வீசிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 5,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் 2000 விமானங்கள் இரத்துசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நியூயோர்க், மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் தீவு உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, ரோட் தீவு (Rhode Island) மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் சில பகுதிகளில் சுமார் 37 அங்குலம் (94 செ.மீ) வரை பனி கொட்டியுள்ளது. இது ரோட் தீவு […]

நாமல் ராஜபக்சவின் உரையை தொடர முடியாமைக்கு ஒக்ஸ்போர்டு யூனியன் மன்னிப்பு கோரியது

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் உரையை தொடர முடியாமைக்கு பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்டு யூனியன் மன்னிப்பு கோரியுள்ளது. அதே வேளையில், பங்கேற்பாளர்களின் பாதுகாப்புக்கு குழப்பம் எதுவும் ஏற்படாமல் விரிவுரையை வழங்குவதற்காக திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்டு யூனியன் நாமலுக்கு தெரிவித்துள்ளது. நிகழ்வின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு அச்சங்களை ஏற்படுத்தும் என்றும், பெரிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் இடையூறு ஏற்படுவதற்கான அறிகுறிகளைப் பெற்றதாகவும் ஒக்ஸ்போர்டு யூனியன் நாமலுக்குத் தெரிவித்துள்ளது. “தற்போதைய ஆபத்து […]

விரைவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!

விரைவில் கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை இன்று(24.02.2026)திருகோணமலை -வெருகல் பிரதேச சபையில் தவிசாளர் எஸ்.கருணாநிதி தலைமையில் சபை அமர்வின் போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சபை உறுப்பினர் குணநாயகம் சுசிலா இது தொடர்பான PSTA ரத்து செய்வது தொடர்பான தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதற்காக சபை தவிசாளரால் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபையின் மொத்த 13 உறுப்பினர்களில் அனைவரும் சபை அமர்வில் கலந்து […]