மலேசியாவில் நிலநடுக்கம்
மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடலோரப் பகுதியில், சற்றுமுன்னர் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடலோர மாநிலத் தலைநகரான கோட்டா கினபாலுவுக்கு வடகிழக்கே 100 கிலோமீட்டருக்கும் (62 மைல்கள்) குறைவான தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது கடலுக்கு அடியில் 619.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் அதிகாலை வேளையில் பதிவாகியுள்ளதாக […]
இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இன்றைய(22) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அஹமதாபாத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 63 ஓட்டங்களையும், டேவிட் பிராவிஸ் […]
இரட்டை கொலை சந்தேகநபர் வௌிப்படுத்திய தகவல்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்தினம் (21) மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சட்டத்தரணியை டி-56 ரக துப்பாக்கியால் சுட்டவர் இவரே என சந்தேகிக்கப்படுகிறது. 46 வயதான சுனில் ரஞ்சித் எனப்படும் இவர், […]
அமெரிக்கா – ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை திகதி அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓமன் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர அல் புசைதி உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் எக்ஸ் கணக்கில் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தையானது எதிர்வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது என மகிழ்ச்சியுடன் […]
பௌத்த மகா சங்கத்தின் முன்மொழிவுகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட மாட்டாது – அமைச்சர் சந்தன அபேரத்ன

அகில இலங்கை பௌத்த மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட சம்மேளனத்தில் நாம் எவ்வித தவறையும் காணவில்லை. அந்த வகையில் அந்த மாநாட்டையும் அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் எந்த வகையிலும் அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்தாது என பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மதகுருமார்கள் உட்பட நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் ஒன்று கூடுவதற்கான உரிமை காணப்படுகிறது. பௌத்த மத குருமார்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் அல்லது நெருக்கடிகள் காணப்படுமாயின் […]
விசேட செயற்குழு நியமனம் வரவேற்கத்தக்கது – தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அதனைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்போம்.விசேட செயற்குழுவில் முன்னிலையாகி யோசனைகளை முன்வைப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் 12 […]
தூங்கிக் கொண்டிருக்காமல் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்!

தேசிய மக்கள் சக்தி தமது தோழர்கள் செய்யும் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாப்பதைக் கைவிட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தூங்கிக் கொண்டிருக்காமல் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல வலியுறுத்தியுள்ளார். மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்கப் போவதாகக் கூறும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினரும், […]
அமைச்சர் நளிந்த பகிரங்க எச்சரிக்கை

கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதை ‘அரசியல் பழிவாங்கல்’ எனக் கூறி ரோஹித அபேகுணவர்தன போன்ற ராஜபக்ச அணியினர் தப்பிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி கொடுத்துள்ளார். அநுர அரசு ராஜபக்சக்களையும், அவர்களின் சகாக்களையும் சிறையில் அடைப்பதிலேயே குறியாக உள்ளது என ரோஹித அபேகுணவர்தன எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஊடகங்களிடம் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறுகையில், […]
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுப்பு

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியை ஸார்ப் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வடபகுதியில் இதுவரையில் முப்பத்தேழு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்று அறுபத்தியொரு (3 778 161) சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து எண்பத்திரெண்டாயிரத்து நூற்று எழுபது (82170 ) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் நிதியுதவியுடன் நிலக்கண்ணிவெடிகளை […]
கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசமைப்பை தொடங்கலாம்!

புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ஆரம்பத்திலிருந்தோ அல்லது பூஜ்ஜியத்திலிருந்தோ தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிகளைத் தொடர முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டினார். புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்ட தேர்தல் […]