சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டிவிட்டு திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய திப்பத்துகொட, ஹொரணை, மொரகஹஹேன மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையிடப்பட்ட பொருட்களை பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்கித் தவசம் வைத்திருந்த ஒருவரும் இந்த நால்வரில் அடங்குகிறார். […]

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன் உயிரிழந்த சகோதரிகள்!

ந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 21 ஆம் திகதி ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூர் மாவட்டத்தின் மனாய் கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (25) மற்றும் விமலா (23) ஆகியோர் சகோதரிகள். இருவரும் தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 20 ஆம் திகதி இரவுவரை திருமணக் […]

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மயிலிட்டி காணிக்கை மாதா ஆலய வருடாந்த திருவிழாவுக்கு தடை?

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலிட்டி காணிக்கைமாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி கடந்த 2ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கு அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் அனுமதிகோரி மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பகுதியைப் பார்வையிட்டதுடன், அங்கு வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை […]

பருத்தித்துறையில் 1000 கிலோகிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு

பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிசாரால் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருட்களாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் 1000 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று (22) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமலின் உரை ரத்து; புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு குறித்த அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் மூலம் […]

எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டன. மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. இந்நிலையில் இன்று முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

கல்வி சீர்திருத்தச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நிபுணர் குழு

கல்வி சீர்திருத்தச் செயல்பாடுகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்க மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்தக் கல்விச் சீர்திருத்தச் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கு 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். அத்துடன், 23,304 பட்டதாரி ஆசிரியர்களை […]

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க வேர்களாக இருக்கும் அமைப்புக்கள் வலுவாக இருக்கின்றது: புதிய பயங்கரவாதச் சட்டம் அதை தடுக்க வேண்டும்!

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேர்களாக இருக்கும் அமைப்புக்கள் வலுவாக இருக்கின்ற போது பயங்கரவாதம் குறித்த சட்டங்கள் பலவீனமாக இருந்தால் அவை மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமானது வலுவானதாக இருக்க வேண்டும் என்பதோடு அது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்’ சர்ச்சைக்குரிய சட்டவரைவானது ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உள்நாட்டு சிவில் […]

முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் சடலம் மீட்பு

புத்தளம் தில்லையடி, அல்-காசிம் கிராமத்திற்கு அருகில் வீதியோரத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) அன்று மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் சனிக்கிழமை (21) இரவு வீட்டில் இருந்தபோது, வாடகை சவாரி (Hire) ஒன்றுக்குச் செல்வதாகக் கூறி இனந்தெரியாத ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். […]

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் சுகவீனமடைந்து மரணம்

சிவனொளி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (22) மதியம் இடம் பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய சோமபால என்பவர் அவரது குடும்பத்தினருடன் சிவனொளி பாத மலைக்கு செல்லும் போது கடும் சுகவீனம் காரணமாக மலை உச்சியில் இருந்து மிகவும் சிறமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வர பட்டு அங்கு இருந்து அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட […]