பஸ் ஆற்றில் வீழ்ந்து 18 பேர் பலி – நேபாளத்தில் சம்பவம்

நேபாளத்தில் காத்மண்டுவை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று திடீரென கவிழ்ந்து ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. போகாராவிலிருந்து காத்மண்டு நோக்கி 44 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த பஸ்ஸினுள் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் போராடி மீட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 18 […]
நியூயோர்க் நகரில் கடும் பனிப்புயல்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தாக்கியுள்ள மிக மோசமான பனிப்புயல் காரணமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9:00 மணி முதல் அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நகரிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரதப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர சேவைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவையாளர்கள் மற்றும் அனர்த்த நிவாரணப் பிரிவினரின் […]
போதைப்பொருள் கடத்தல் தலைவர் “எல் மென்சோ” மெக்சிகோவில் சுட்டுக்கொலை!

மெக்சிகோவினால் தேடப்பட்டு வந்த மிக முக்கியமான போதைப்பொருள் கடத்தல் தலைவனும், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) என்ற கடத்தல் கும்பலின் தலைவனுமான நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் (Nemesio Oseguera Cervantes) பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். “எல் மென்சோ” (El Mencho) என்று பரவலாக அறியப்படும் இவர் கொல்லப்பட்டதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்திலுள்ள தபால்பா (Tapalpa) நகரில் “எல் மென்சோ” மறைந்திருப்பதாகக் கிடைத்த இரகசியத் […]
எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி!

ஆப்கானிஸ்தானில் நேற்று (22) பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு, சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திதா மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 […]
ஜெப்ரி எப்ஸ்டீன் விருந்தில் லண்டன் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியது?

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் 2010-ம் ஆண்டு நியூயார்க்கில் நடத்திய ஒரு இரவு விருந்திற்கு, லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கியதாகப் புதிய தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சருக்கு (முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ) பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இந்த அதிகாரிகள், எப்ஸ்டீனின் வீட்டில் நடைபெற்ற அந்த விருந்தின் போது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் […]
மாரிடைம்ஸ் பகுதிகளில் பலத்த காற்றுடன் ‘நோர்’ஈஸ்டர்’ புயல்!

திங்கட்கிழமை முதல் மாரிடைம்ஸ் பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுடன் ‘நோர்’ஈஸ்டர்’ புயல் ஆரம்பித்துள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் மேலும் ஒரு புயல் மாரிடைம்ஸ் பகுதிகளுக்குள் நகர்ந்து வருகிறது. இந்த புதிய ‘நோர்’ஈஸ்டர்’ புயல் குறிப்பிடத்தக்க அளவில் பனிப்பொழிவையும் பலத்த காற்iwAk; ஏற்படுத்தும். இதனால் பயண தாமதங்கள்,போக்குவரத்து சேவை ரத்துகள் மற்றும் மின்தடை ஏற்படும் அபாயமும் உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பரவலாக 15 முதல் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
டொரோண்டோவின் சர்வதேச முஸ்லிம் அமைப்பின் இஃப்தார் நிகழ்வு

எடோபிகோக் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் டொரோண்டோவின் சர்வதேச முஸ்லிம் அமைப்புடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையாக இருந்தது என ரொரன்டோ முதல்வர் டக் பேர் தனது லிங்டின் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ரமலான் என்பது நம்பிக்கைஇ தாராள மனப்பான்மை மற்றும் சமூக ஒற்றுமையைப் பற்றிச் சிந்திக்கும் காலமாக மட்டுமல்லாதுஇ ஒன்டாரியோவை தினமும் வலுப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் குடும்பங்களின் பல்வேறு பங்களிப்புகளை கொண்டாடும் நேரமாகவும் உள்ளது என்பதோடு இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஈத் […]
ஜனாதிபதி தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றார் – அசேல சம்பத் விசனம்

அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேனவின் வர்த்தக வளர்ச்சிக்குக் பின்னால் உள்ள அரசியல் சலுகைகள் மற்றும் துறைமுக அமைச்சரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், டட்லி சிறிசேன இன்று ரோல்ஸ் […]
தபால் திணைக்கள வருமான இலக்கு!

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 5.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் அலுவலகத்தை நேற்று (22) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த வருடம் தபால் திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 13,450 […]
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீக்கம்
சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் சுமிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், சில மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் முதலாம் நிலை எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன. இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் […]