யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானம் : நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, ‘திட்ட வரைபு அறிக்கை’ ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட […]

போதைப்பொருளை பயன்படுத்திய சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்டதரணி ஒருவர் கெசல்வத்தை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, வாழைத் தோட்டம் – சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் அமைந்துள்ள இருண்ட மற்றும் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் கைதான சட்டதரணியிடமிருந்து 130 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், அதனை உட்கொள்ள பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் சட்டதரணி அடையாள அட்டை ஆகியவை […]

ரயில் சேவைகள் வழமைக்கு வந்தன…

ட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர கடுகதி ரயில், அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் ரயில் ஜனவரி 20ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் ‘புலத்திசி’ […]

மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இது தொடர்பான விசாரணைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கையீனம், அரச சொத்துக்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத நியமனங்கள், கொள்முதல் நடைமுறை மீறல்கள் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, […]

கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி சா/த மாணவன் பலி

தவலம – உடுகம வீதியில் தவலம சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலங்கல்ல, மல்கல்ல பகுதியைச் சேர்ந்த கசுன் கல்ஹார என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் மற்றும் காரை செலுத்திய வைத்தியரும் காயமடைந்த நிலையில் உடுகம […]

பாகிஸ்தானில் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி

பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்கள் அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர். கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த மாணவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்திட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தை பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) நிர்வகித்து வருகின்றது. மாணவர்கள் கராச்சியில் உள்ள முதலிட சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் […]

இந்தியாவின் அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரி இலங்கை விஜயம்

இந்தியாவின் அயோத்தி நகரிலுள்ள சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரி கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand Giriji Maharaj) உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (23) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-192 ரக விமானம் மூலம் வருகை தந்த இந்தத் தூதுக்குழுவில் துறவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 14 பேர் அடங்குவர். இவர்களை வரவேற்பதற்காக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் […]

யூரி தோட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

யூரி தோட்டத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யூரி தோட்டப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதன்விளைவாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மக்கள் வசிக்கும் பகுதிகள் பெரிதும் சேதமடைந்ததுடன், தோட்டத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை, ஆலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இருப்பினும், இதுவரை உரிய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என […]

பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

ஹொங்கொங் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண எழுச்சி நட்சத்திரங்கள் (ரைசிங் ஸ்டார்ஸ்) கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனானது. பாங்கொக் தேர்ட்தாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய இந்தியா 46 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது. தேஜல் ஹசாப்னிஸ், அணித் தலைவர் ராதா யாதவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 69 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அத்துடன் ப்ரேமா […]

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் மேல் மற்றும் தென் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் காரணமாக பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மேல் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களாக தமக்குரிய நியமனங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் […]