கந்தளாய் பேராறு வீதி 20 வருடங்களாக புனரமைக்கப்படவில்லை?

ந்தளாய் பேராறு 129/1 வீதி கடந்த இருபது வருடங்களாக எவ்வித புனரமைப்பும் இன்றி குன்றும் குழியுமாக காணப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த வீதியை தினசரி பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் பலமுறை தங்களே நிதி திரட்டி தற்காலிகமாக செப்பனிட முயற்சி செய்துள்ளதுடன், அது நீடித்த தீர்வாக அமையவில்லை. முறையான வடிகால் அமைப்பு இல்லாததும், தார் இடப்படாததும் காரணமாக மழைக்காலங்களில் வீதி சேறும் சகதியுமாக மாறுகிறது மேலும், இரவு நேரங்களில் வீதி விளக்குகள் […]
போரதீவுப் பற்று பிரதேச சபை தவிசாளர் முக்கிய அறிவிப்பு

சபையில் உள்ளவர்கள் சமநிலை இல்லாத காரணத்தினால் எந்தவித நடவடிக்கைகளை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாத நிலையில், ஒரு சில வாரங்களுக்கு சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சேவை நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார். இன்று(23.02.2026) மட்டக்களப்பு போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையின் 09வது சபை அமர்வு பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. சபைச் சம்பிரதாயங்களுடன் இடம்பெற்ற அமர்வில் தவிசாளர் உரை, மற்றும் பிரதேச […]
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டைகள் மீட்பு

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளனர். இரணைதீவு மேற்கு கடற்பரப்பில் கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மூன்று டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன. இதன்போது சட்டவிரோத முறையில் பிடிப்பட்ட 1,232 கடலட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் […]
அரசாங்கத்துக்குப் பொதுபல சேனா கடும் எச்சரிக்கை

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் முன்னெடுத்து வரும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபல சேனா அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. 23ஆம் திகதி திங்கட்கிழமை இராஜகிரியவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை […]
இத்தாலியில் விபத்து: இலங்கையர் பலி!

இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், தனது பணியிடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் சாரதி […]
உரப் பையில் காணப்பட்ட மோட்டார் குண்டு!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் திங்கட்கிழமை (23) மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாராவது தமது காடியை சுத்தம் செய்யும்போது குறித்த குண்டு அங்கு காணப்பட்டதால் இவ்வாறு கொண்டுவந்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை பெற்றபின் குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து கொக்குத்தொடுவாயில் யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கப்படுகிறது?

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026 இன்று […]
நாகர்கோவில் வடக்கில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் இன்று(23) கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நெல்லியடி விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை நாகர்கோவில் வடக்கு பகுதியில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 1Kg 750 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கேரள கஞ்சாவுடன் மருதங்கேணி பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். […]
இலங்கையில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 81 வயது முதியவர்

இலங்கையில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று(23.02.2026) தோற்றியுள்ளார். கிரிபெரியாவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா என்ற வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவராவார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, தேசிய கல்வி முறைமையின் நிலையாகும். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு ஒரு வலுவான செய்தி இதன் மூலம் அனுப்பப்படுகிறது. நடைமுறை வாழ்க்கைக்கு இது எவ்வாளவு […]
பௌத்த பிக்குகள் மகா சம்மேளனம் தோல்வி – அமைச்சர் லால் காந்த

கொழும்பில் பௌத்த தேரர்கள் நடத்திய பௌத்த பிக்குகள் மகா சம்மேளனம் தோல்வியடைந்துள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். எண்ணாயிரம் தேரர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதாக சொன்னார்கள்.ஆனால் 300 க்கு மேற்பட்டவர்களே வந்திருந்தனர்.மாநாடு நடத்துவதற்கு முன்னர் சமூகத்தில் பெரும் பேசு பொருளாக்கப்பட்ட விடயம் இன்று பிசுபிசுத்துப் போயுள்ளது. எமக்கு பெரும் நம்பிக்கை இருந்தது,நாட்டில் இன்று பொருளாதார சமூக கலாசாரத்தில் நாங்கள் ஏற்படுத்திருக்கும் மாற்றம் நிச்சயம் மக்கள் அறிவர். அத்தோடு இனவாதத்திற்கு […]