புதிய முகங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) புதிய முகங்களுடன் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறும் என்று கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று ( 23.02.2026 ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகவுள்ளது. இதில் புதிய இளம் முகங்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கிராமமட்ட அளவிலான கட்சிப் பணிகள் […]
நாட்டின் பொருளாதார மீட்சியில் கடந்த அரசின் பங்களிப்பும் உள்ளது!

நாட்டின் பொருளாதார மீட்சியில் முன்னைய அரசின் பங்களிப்பும் உள்ளது. அதை எவரும் மறுதலிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் வழங்கிய நேர்காணலில், பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கு தற்போதைய அரசு முன்னெடுத்த செயற்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். எனினும், முன்னைய அரசின் பங்களிப்புத் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் […]
ஓய்வூதியம் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக்க பண்டார இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். தென்னிலங்கை கடற்கரையில் மர்மமான முறையில் பெண்ணின் சடலம் : பெண் கும்பலின் அட்டகாசம் தென்னிலங்கை கடற்கரையில் மர்மமான முறையில் பெண்ணின் சடலம் : பெண் கும்பலின் அட்டகாசம் குறித்த […]
பிரித்தானியா சென்ற நாமலுக்கு தொடரும் பின்னடைவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவருக்கு எதிராக அங்குள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, அவருக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்தை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நாமலுக்கு மற்றுமொரு பின்னடைவாக, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அவரது விசேட உரையும் அதிகாரபூர்வமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட கணனி அறை திறப்பு!

பேராதனைப் பல்கரலக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டு கணனி அறைகளும் கடந்த வௌ்ள அனர்தத்தின் போது கடுமையாகப் பாதிக்கப்படிருந்தன. அவற்றின் ஒன்று தற்போது புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரிவில் இருந்த அனைத்து கணனிகளும் பழுதடைந்த காரணத்தால் மாணவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இதனை நிவர்த்தி செய்ய பிரபல தனியார் கணனி நிறுவனம் ஒன்று முன்வந்து 100 கணனிகளை இலவசமாக வழங்கியது. மேற்படி கணனி கூட திறப்பு விழாவில் பல்கலைக்கழக உபவேந்தர் ட்ரன்ஸ் மதுஜித் பிரதம அதிதியாகக் கலந்து […]
தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 ஆவது நிலக்கரி கப்பலும் தரம் குறைந்தது

தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 நிலக்கரி கப்பல்களும் தரம் குறைந்தவை என்று சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆவது நிலக்கரி கப்பலும் தரம் குறைந்தது என்று தரவுகளோடு பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஹோமாகம ஸ்ரீ கல்யாணதர்ம அபினவாராம விகாரையில் போதி மரத்தை சுற்றி அமைக்கப்பட்ட தங்க சுற்று வேலியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை (23) கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச […]
ரஷ்யப் பயணியின் பணம் திருட்டு : விடுதி உரிமையாளரின் மகள் கைது!
காலி, உனவட்டுன – பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் பெருந்தொகைப் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில், அந்த விடுதி உரிமையாளரின் மகள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு: குறித்த விடுதியில் தங்கியிருந்த ரஷ்யப் பயணிக்குச் சொந்தமான 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா (620,000) பணம் திருடப்பட்டுள்ளதாக உனவட்டுன சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை […]
முக்கிய முடிவுகளை நாளை அறிவிக்கிறது அ.திமு.க!

பசும்பொன்னில் நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா இன்று (பிப். 23) மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம். நாளை அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நாளை நடைபெறும் கூடத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் […]
சாதிப் பிரச்சினையில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் தாக்கியமைக்கு தி.மு.க ஏன் மௌனம் காக்கிறது?
தூத்துக்குடியில் சாதிரச்சினையில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் […]
பரீட்சை நிலையத்தில் மோதல்: 5 மாணவர்கள் படுகாயம்

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழகியல் பாடத்துக்கான செய்முறைப் பரீட்சையின் இடைவேளையின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வலப்பனை பொலிஸார், உடனடியாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர். காயமடைந்த 5 மாணவர்களும் தங்களது எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் பரீட்சையைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, […]