இணையவழி மோசடி மையங்கள் குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் இணையவழி மோசடி மையங்கள் (Cyber-enabled fraud compounds), மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது. கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மையங்கள் ஒரு “தன்னிறைவு பெற்ற நகரங்கள்” போலச் செயல்படுவதாகவும், அங்கு சுமார் 3 இலட்சம் பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில், ரஷ்யா டஜன் கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். தலைநகர் கிவ், கருங்கடல் துறைமுக நகரான ஒடெசா மற்றும் உக்ரேனின் மத்தியப் பகுதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன. ரஷ்யா ஒரே நேரத்தில் ஏராளமான தாக்குதல் ட்ரோன்கள், பொலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது. கிவ் பிராந்தியத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் […]
இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பமானது

இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பமானது. இந்த ரயில் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தின் அகமதாபாத் – புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை இந்திய பிரதமர் மோடி கடந்த 2024 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைத்தார். அதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ […]
2016 முதல் அரச சேவையில் இணைந்தோருக்கு மகிழ்ச்சி செய்தி
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அந்த அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]
மீண்டும் அரநாயக்கவில் அபாயம்!

‘டித்வா’ புயலினால் ஏற்கனவே மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளுக்கு இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரநாயக்க நகரில் இருந்து தோதல்தோய வரை செல்லும் பிரதான வீதியின் காபட் (Carpet) இடுகை, அம்பலகந்த பகுதியில் நேற்று நடுவே மிகவும் அபாயகரமான முறையில் வெடித்துத் தாழிறங்கியுள்ளது. கடந்த நாட்களில் மண்சரிவு ஏற்பட்ட இந்த இடத்தில் உள்ள பிரதான கால்வாயின் மதகு (Culvert) முறையாகப் புனரமைக்கப்படாத […]
இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) இடம்பெற்றது. இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பிற்பகல் 3.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் […]
இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு

இந்திய கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘MILAN – 26’ பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு ஆகியவற்றில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்தியக் கடற்கரைப் பகுதியில் இந்த பிரம்மாண்டமான சர்வதேச கடற்படை கண்காணிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி இதில் […]
விபத்தில் சிக்கிய நண்பர்களை பார்க்கச் சென்றவருக்கு விபத்து!
காலி, தடல்ல மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று(22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார். காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் கிந்தோட்டை மற்றும் தடல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை ரத்கம, பிந்தாலிய சந்தியில் விபத்துக்குள்ளான தமது நண்பர்கள் இருவரைப் […]
லிட்ரோ எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3900 மற்றும் 3700 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. எவ்வாறாயினும், இன்றைய தினமும் (22) நாட்டின் பல […]
பாரிய கடத்தல் முறியடிப்பு – இருவர் கைது!

பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத விவசாய இரசாயனப் பொருட்கள் அடங்கிய தொகையுடன் சிலாபம், தொடுவாவ பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இதன்போது 25 உறைகளில் அடைக்கப்பட்ட 992 கிலோ 800 கிராம் எடையுள்ள பீடி இலைகள், 1,40,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்கள் என்பவற்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கிப் படகு என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட […]