ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு; 23,000க்கு மேற்பட்டவர்களை இணைக்க அனுமதி

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு […]
தேசிய பாதுகாப்பு அவசியம்; நாம் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கத்திற்கு எதிரானவர்கள் அல்லர் – நல்லூர் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான இ. சிவகுமார், வி. அனந்தன் மற்றும் சு. அனுஷா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையில் கடந்த 18ஆம் […]
நாடு திரும்பினார் ஜனாதிபதி
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று (20) இரவு நாடு திரும்பினார். ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-196 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி விவகாரம்: சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க நேற்று (20) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் 6 ஆம் தரத்திற்கான ஆங்கிலப் பாடத் தொகுதியில் சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு […]
தொடர்ந்தும் விளக்கமறியலில் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட நால்வர்!

ட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த […]
மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் அர்ச்சுனா எம்.பியின் காணியால் மக்களுக்கு தொந்தரவு?

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் பெரியவிளான் பகுதியில் உள்ள, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டப்பட்டது. வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (20) நடைபெற்றது. இதன்போது பெரியவிளான் வட்டார உறுப்பினரான எட்வேட் மரியவாசினி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், பெரியவிளானில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து பாம்புகள் வெளியே வந்து […]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீர்வை வரிகள் சட்டவிரோதமானவை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக வரிகள் (tariffs), கூட்டாட்சி சட்டத்தை (Federal Law) மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பானது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட ஒரு பாரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறித்த வர்த்தக வரிகள் விதிப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தமையே இதற்குக் காரணமாகும்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ்ப் பொறுப்பதிகாரி!

யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு நேற்று(20.2.2026) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாறு புதிய பொறுப்பதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். தமிழர் பகுதிகளில் தமிழ் தெரியாத சிங்கள மொழி பேசும் பொறுப்பதிகாரிகளை நியமிக்கின்றதால் மக்கள் தமது பிரச்சினைகளை தெளிவாக கூற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்ய முடியும் […]
துறைமுகப் பகுதியில் மீண்டும் நெரிசல்

கொள்கலன் விடுவிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொள்கலன்களை விடுவிப்பதற்கான வினைத்திறனான முறைமை இல்லாமை உள்ளிட்ட விடயங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு துறைமுக வளாகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை வௌியேற்றுவதிலும், அவற்றை துறைமுகத்திற்கு வௌியேயுள்ள முனையங்களில் பரிசோதிப்பதிலும் இவ்வாறு பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஒருகொடவத்தை கொள்கலன் வளாகத்திலும் நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கொள்கலன் ஊர்தி […]