போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விளையாட்டின் மூலம் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தம்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா (FIFA) மற்றும் ட்ரம்ப்பின் அமைதிக்கான சபை ஆகியவை இணைந்து, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்பந்து விளையாட்டின் மூலம் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தவும், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைதிக்கான சபை, தனது முதல் கூட்டத்தில் காசாவின் மறுசீரமைப்பு நிதி குறித்து விரிவாக விவாதித்தது. ஹமாஸ் ஆயுதக் குழு முழுமையாகக் கலைக்கப்பட்ட பிறகு, காசாவை மீண்டும் […]
நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது சூடானில் ட்ரோன் தாக்குதல்

சூடானின் தென் கோர்டோப மாகாணத்தில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எஃப் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில், இந்நாட்டில் தொடரும் உள்நாட்டுப் போரின் கோர முகத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கடுகிலி மற்றும் தில்லிங் நகரங்களை நோக்கிச் சென்ற லொறிகள் மீது கர்டாலா (Kartala) பகுதியில் வைத்து இந்தத் […]
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை!

கேகாலை – தெரணியகலை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரணியகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தெரணியகலை – மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவருக்கும் அவரது உறவினருக்குமான தனிப்பட்ட தகராறு காரணமாக, சந்தேகநபர் இந்த கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலையைச் […]
15 வயது மாணவியைக் காணவில்லை!

வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய குறித்த மாணவி கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தாயாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்பவரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார். இவர் தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0778060470 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது வவுனியா பொலிஸாருக்கோ தகவல் […]
உலகளாவிய ரீதியில் புதிய வரியை விதித்தார் டிரம்ப்!

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பை “பயங்கரமானது” என்று குறிப்பிட்ட அவர், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்தவர்களை “முட்டாள்கள்” என்று கடுமையாகச் சாடினார். கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அறிவித்த பெரும்பாலான உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை என்று நீதிபதிகள் அறிவித்த சிறிது நேரத்திலேயே டிரம்ப் இந்தத் திட்டத்தை வெளியிட்டார். 6-3 என்ற விகிதத்திலான தீர்ப்பில், ஜனாதிபதி தனது […]
அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் விசேட சோதனை

களுத்துறை, தொடங்கொட நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நேற்று (20) இரவு விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பிலும் தொடங்கொட பொலிஸார் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை; பிரித்தானியாவில் சம்பவம்

பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 32 வயதுடைய நிரோதா என அழைக்கப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, 2025 ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர […]
வாகன விபத்தில் 3 வயது சிறுமிச் பலி!
கம்பளை – நாவலப்பிட்டிய வீதியின் நாகொல்ல பகுதியில், இடம்பெற்ற வாகனவிபத்தில் 03 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (20) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கம்பளை நோக்கிச்சென்ற கார், பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் இதன்போது காயமடைந்தனர். இதன்போது பலத்த காயமடைந்த 03 வயது சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் […]
யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட அமைச்சர்!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் நேற்று (20) துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள் உள்ளிட்ட குழாம் துறைமுகத்தை பார்வையிட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
10 அம்சங்களைக் கொண்ட மகா சங்கப் பிரகடனம் வௌியீடு

பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மகா சங்க மாநாடு’ நேற்று (20) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது, பௌத்த சாசனம், பிக்குகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சமூக நெருக்கடிகளைத் தணிப்பதற்காக நாட்டின் அனைத்து பிக்குகளும் பௌத்த தலைவர்களும் இணைந்து ‘சங்கப் பிரகடனம்’ ஒன்றை வெளியிட்டனர். அனைத்து பிக்குகளினதும் கையொப்பங்களுடன் கூடிய […]