25ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறத் தீர்மானம்

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக, இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 09 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த […]

ஊடகவியல் வலையமைப்பு ஒன்றுகூடல்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 175க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் பெப்ரவரி 20 ஆம் திகதி பத்திரிகையாளர்களுக்கான சுமுக ஊடக வலையமைப்பு ஒன்றுகூடல் நிகழ்வை நடத்தியது. இலங்கையின் தேசிய முன்னுரிமைகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான அமைச்சின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் வழங்கி வரும் […]

மன்னாரில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிப் போராட்டம்

மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (14) கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட […]

டொராண்டோ காவல் நிலைய 911 சேவையாளருடன் சந்திப்பு

அவசரநிலைகளில் உதவி அழைப்புகளை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் டொராண்டோ காவல் நிலைய சேவை 911 உதவிமையத்தைப் பார்வையிட்டேன் என டொராண்டோ முதல்வர் டக் பேர்ட் பதிவிட்டுள்ளார். காவல் நிலைய சேவையதளர்களின் தொழில்முறை அணுகுமுறையும் உறுதியான அர்ப்பணிப்பும் எங்கள் சமூகங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை சுட்டிக் காட்டத் தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக கும்பலுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர் கைது

பாணந்துறை பிரிவு குற்றப்புலனாய்வுப்பிரிவு, இரண்டு முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ‘டுபாய் சுத்தா’ மற்றும் ‘பாணந்துறை குடு சலிந்து’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளரை கைது செய்துள்ளது. நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் பாணந்துறை, லெஸ்லி குணவர்தன மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நீண்ட காலமாக பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் அவரது வீட்டை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது அவரது கால்சட்டைப் பையில் 103 […]

எமது கட்சியினர் யார் சட்டவிரோதமாக நடந்திருந்தாலும் தயக்கமின்றி கைது செய்யுங்கள் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராகத் தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று (20.02.2026) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரால் கடந்த மாதம் எழுப்பப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் […]

போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டனர். ஆனால், காணிகளை இழந்த மக்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. […]

வைத்தியர் சத்தியமூர்த்தி அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சிக்கு எதிராக முறைப்பாடு

அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டு தினசரி பத்திரிகைகளுக்குள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரங்களும் இணைத்து விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாழ். நகர பகுதியில் இத்துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குறித்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள கருத்தொன்று தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைத்தியர் சத்தியமூர்த்தி பொலிஸ் […]

ஜனாதிபதியிடம் எதிரணி கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மாத்திரம் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த […]

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள தங்கத்தின் விலை மாற்றம்

தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் நேற்றைய தினம் (20.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக பதிவாகியிருந்தது. அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து, 84.59 டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் […]