556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு கையளிப்பு

பொலிஸ் திணைக்களத்தின் சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் 556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (18) பாதுகாப்பு அமைச்சி வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் குறித்த உபகரணத் தொகுதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. அதற்கமைய 365 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 1718 கணினிகள், 129 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 575 […]

ஐ.சி.சி ஆடவர் இருபதுக்கு 20; ஆப்கானிஸ்தான் 82 ஓட்டங்களால் வெற்றி

ஐ.சி.சி ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய (19) கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இப்ராஹிம் […]

இன்றும் நாட்டில் மழை

டக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடும். அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் […]

கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள் மீது திணிக்கமாட்டோம் – ஹர்ஷன நாணயக்கார

மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவைப் பகிரங்கமாக வெளியிட்டு, பொதுமக்களிடமிருந்து அதுகுறித்த அபிப்பிராயங்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அவ்வரைவு மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் […]

பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இனவிகிதாசாரப் பரம்பலில் மாற்றம்; எதற்காக மகாவலி ‘கே’ வலயம்? – சாணக்கியன்

மகாவலி ‘கே’ வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது? இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு? இந்த ‘கே’ வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன? மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் பிரகாரம் நிலப் பகிர்வு மற்றும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் குடிப்பரம்பல் மீது தாக்கம் ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான […]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்; தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தே.மு.தி.க. எந்தப் பக்கம் என்று நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர். […]

மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மற்றும் பேரீச்சம்பழ மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தலைமையில் நடைபெற்ற இப்பணிகள், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதனின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டன. பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறைகள், காலாவதி திகதிகள், சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக நோன்பு காலத்தில் அதிக […]

வினாத்தாள்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் தீ

பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள் பயணித்திருந்ததுடன், மேலும் ஒருவரான ஆசிரியர் முச்சக்கர வண்டியை செலுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், முச்சக்கரவண்டியில் தீப்பற்ற ஆரம்பித்ததையத்து பின்னால் வந்த இலங்கை மின்சார சபைக்குரிய லொறியில் பயணித்த பணியாளர்கள் விரைந்து முச்சக்கர வண்டியை நிறுத்தி, தீயை கட்டுப்படுத்தியதுடன், அதில் […]

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடியாகர்கள் 12 பேர் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் நேற்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.