நல்லூர் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது நேற்றையதினம்(19.2.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை அரசியல் பழிவாங்கல் காரணமாக முன்னறிவித்தல் இன்றி உடனடியாக மூடும்படி சபை தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை […]

புதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று(19) பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், முதலீடு […]

துறைமுக வளாகத்தில் விபத்து; ஒருவர் பலி

கொழும்பு துறைமுக வளாகத்தில், கனரக Forklift ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துறைமுக வளாகத்தின் 3 ஆம் கட்டத்திலிருந்து 2 ஆம் கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த கனரக Forklift முன்னால் அதே திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் […]

பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே மேலும் கூறுகையில், புதிய வரி விதிப்பால் வாகனங்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாது. எனினும் கடந்த […]

2 வயதுச்சிறுமி கொலை: சந்தேக நபருடன் தாயும் கைது

கடந்த 13ஆம் திகதியன்று ஹோமாகம, மாகம்மன, சமகி மாவத்தையில் இரண்டு வயதுடைய சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் ஹோமாகம, பிட்டிபன தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு பலத்த அடிமையான சந்தேக நபர், வாடகைக்கு முச்சக்கர வண்டி செலுத்துபவர் என்பதுடன், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் மஹரகம பகுதியில் உள்ள அழகு […]

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரை நிதி குற்றப் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்து கொள்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் கைதான 22 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் […]

சுகாதார சேவையில் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி

சுகாதார சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தமக்கும் விளங்குவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்குச் சென்று அதன் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று முற்பகல் மல்வத்து மகா விகாரைக்குச் சென்று, இலவச சுகாதாரச் சேவை மற்றும் […]

ஜனாதிபதி அநுர அரச தலைவர்கள் பலரைச் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் நேற்று (19) ஈடுபட்டுள்ளார். புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில், இந்த அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. அதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் நடைபெற்றது. அதேநேரம், பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அபுதாபியின் […]

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் தீ

சிவனொளிபாதமலை உச்சிக்கு எதிரே அமைந்துள்ள சிவனொளிபாதமலை வனப்பகுதிக்குச் சொந்தமான மலைத்தொடரில் நேற்று (19) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும், அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரதேசமானது அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவர அமைப்புகளைக் கொண்ட, பல்லுயிர் தன்மையில் மிக உயர்ந்த ஒரு உணர்திறன் மிக்க வலயமாகும். தற்போதைய நிலைமையின் காரணமாக, இந்தப் […]