பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்களைத் தெளிவுபடுத்த இன்று மாநாடு!

தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘மகா சங்க மாநாடு’ இன்று (20) நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிக்குகளுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், […]

குடும்ப தகராறு; மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்!

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, குறித்த பெண்ணுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் என தெரியவந்துள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் […]

முறையற்ற வகையில் சொத்துச் சேர்ப்பு: அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை விகாரை – ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, அதன் விகாராதிபதி தாக்கல் செய்த ரீட் மனுவை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோரைக் கொண்ட […]

தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்; 3 பொலிசார் பணி இடைநீக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய மற்றும் உதவிப் பணியாளராகக் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பெண் சந்தேகநபர் […]

இரட்டை கொலை – துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை இன்று (20) இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார். குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குற்றத்திற்காக துப்பாக்கிகளை வழங்க வந்த வாகனம் கொட்டாவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. […]

நிதித் துறை குற்றங்கள்; கனடியர்களையும் வணிகங்களையும் பாதுகாக்க புதிய நடவடிக்கை

பல கனடிய தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், நிதிப் பறிமுதல் (Extortion) என்பது அன்றாட வாழ்வின் ஒரு கடுமையான நிஜமாக மாறியுள்ளது. இது சமூகங்களுக்கும் குடும்பங்களுக்கும் அச்சம், மிரட்டல் மற்றும் தீமைகளை ஏற்படுத்துவதுடன், கனடியர்களின் பாதுகாப்பு உணர்வையும் பாதிக்கிறது. இவ்வகை குற்றங்கள் பெரும்பாலும் எல்லைகள் தாண்டி செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளால், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், அரசுகள், சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை இன்றியமையாததாகும் என கனடா நிதித்துறை […]

அரசாங்கம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளமை கேவலமானதொரு செயற்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

காணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது.சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு.மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் .மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட […]

சந்தேகத்தின் பேரில் கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில் உள்ள சில முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. அண்ட்ரூவின் கைது குறித்துப் பதிலளித்த மூன்றாம் சார்ள்ஸ் மன்னர், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பொலிஸாருக்கு தனது முழுமையான மற்றும் இதயப்பூர்வமான […]

பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிரபல பிளோரிடா ராப் பாடகர் லில் போபா உயிரிழந்துள்ளார். அட்லாண்டாவில் மருத்துவ அதிகாரிகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். 25 வயதான ஜனாரியஸ் மைகல் வீலர் (Janarious Mykel Wheeler). காலை 11 மணியளவில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம், லில் பாப்பாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட “Out Of Town Bae” பாடலுக்கான மியூசிக் வீடியோ வெளியீடு அறிவிக்கப்பட்டது. அந்த வீடியோவில் அட்லாண்டா நகரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் […]