குடியேற்றக் கொள்கை மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த கேள்விகளுக்கு அல்பெர்டா மாகாணத்தில் பொதுவாக்கெடுப்பு

அல்பெர்டா முதல்வர் டேனியல் ஸ்மித், மாகாணத்துக்கான குடியேற்றத்தை வரையறுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் கீழ் மாகாணத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் மாற்றங்கள் குறித்து அக்டோபர் மாதத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த விரும்புவதாக அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை ஒளிபரப்பான தொலைக்காட்சி உரையில், அக்டோபர் 19 அன்று ஒன்பது கேள்விகளுக்கு அல்பெர்டா மக்களிடம் வாக்களிக்க அழைக்க விரும்புவதாக ஸ்மித் தெரிவித்தார். இக்கேள்விகள் ஒவ்வொன்றும், கடந்த ஆண்டு நகர மன்றக் கூட்டங்கள் மற்றும் எழுத்துப் பதிவுகள் மூலம் மக்களுடன் ஆலோசனை நடத்திய […]

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று(20.02.2026) காலை 10 மணியளவில் கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்தவித பதிலும் நீதியும் கிடைக்கப் பெறவில்லை, நாம் தள்ளாடும் முதிர்ந்த வயதிலும் நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். பிள்ளைகளைத் […]

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து 21,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனையிடச் […]

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதியான அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கையின்பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வுபெற்ற) எயா வைஸ்மாஷல் சம்பத் துயகொன்தவை நேற்று (19) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இறையாண்மையைப் பாதுகாத்து பிராந்தியப் பாதுகாப்பை பலப்படுத்துகின்ற வெளிப்படையான பங்காண்மையினை மீள வலியுறுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மைக்கு உதவி செய்வதற்காக கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல் என்பன தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. எமது […]

முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேசசபை வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு, கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை வெளியேற்றி, அந்த இடத்துக்கு பிரிதொரு உறுப்பினரை நியமிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்குத் தடை உத்தரவு வழங்கக் கோரி அச்சபையின் முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று (19.02.2026) தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர் வழக்கு விசாரணை முடியும் வரை தமது இடத்துக்குப் பிரிதொரு உறுப்பினரைத் தமிழரசுக் கட்சி நியமிப்பதற்கு எதிராக இடைக்காலத் […]

போக்குவரத்து திணைக்கள கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் தவிர ஏனைய அனைத்து கட்டணங்களையும் திருத்தி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணத்தில் ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத உயர்வு செய்யப்படலாம் என்று துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விலையை விட கணிசமாக குறைந்த விலையில் துறையால் உரிமங்களைப் பெற முடிந்ததால், இந்த முறை உரிமக் கட்டணங்களின் விலை அதிகரிக்கப்படாது என்று அவர் கூறியுள்ளார். ரூ. 100 […]

அதிசொகுசு வீடு அரசினால் பறிமுதல்

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்கள் பெற்றதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வலஸ்முல்ல, கடிகமுவ பகுதியிலுள்ள 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று மாடி வீடு கொண்ட 14.1 பேர்ச் காணியை பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கமைய முடக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதி முதல் 07 நாட்களுக்கு முடக்க […]

யாழ்.பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா: வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மருத்துவபீட மாணவி அபிராமி நற்குணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. உள்ளக விளையாட்டரங்கில் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நற்குணம் 8 தங்கப் பதக்கங்களைச் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். யாழ். மருத்துவப் பீட வரலாற்றிலேயே ஒரே பட்டமளிப்பு விழாவில், ஒரு மாணவி 8 தங்கப் பதக்கங்களை வெல்வது இதுவே முதல் தடவையாகும். சத்திரசிகிச்சை (Surgery) – விசேட சித்தி & பதக்கம் (2), மகப்பேற்றியல் (Obstetrics and Genecology) – […]

இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது முகப்புத்தகத்தில் இன்று (18.02.2026) இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில் மேலும், இதனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை இன்றும் (20.02.2026), நாளையும் (21.02.2026) நாளை மறுநாளும் […]

பிரித்தானியாவின் மகாராணி 10 வயதில் எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது!

பிரித்தானியாவின் மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று, எதிர்வரும் 27ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது. சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கடிதம், 1936 முதல் 1940-க்கு இடைப்பட்ட காலத்தில் மகாராணி 10 முதல் 12 வயதிற்குள் இருந்தபோது எழுதப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் ரோயல் லொட்ஜின் தலைமைப் பணிப்பெண் பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு எழுதப்பட்ட இந்த ஒரு பக்கக் கடிதத்தில், நாய், குதிரை மற்றும் […]