ஜனாதிபதியும் பிரதமரும் மன்னிப்புக் கேட்காவிட்டால் பௌத்த விரோதத்துக்கு எதிராக போர் தொடுப்போம்!

வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரணி அமரசூரிய ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கொட்டபிட்டிய ராவுல தேரர் தெரிவித்துள்ளார். அதாவது வடக்குக்கு பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு வரும் தென்பகுதியினர் வைராக்கியத்தை விதைப்பதாக ஜனாதிபதி கூறிய விடயம் மற்றும் பிரதமர் மன்னாரில் தெரிவித்த கருத்தான, யுத்தத்தை எங்களை கேட்டா மேற்கொண்டனர் என்ற கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பில் பௌத்த மகா சம்மேளனத்தில் இன்று […]
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வீட்டின் மீது கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பலி

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவக்க பகுதியில் வைத்து மின் கம்பத்துடன் மோதி வீதியை விட்டு விலகி அங்கிருந்த வீடொன்றின் மீது கவிழ்ந்துள்ளது. இதில் குறித்த வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த மூன்று சிறுவர்கள் சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் எதிர்ப்பால் நாமலின் உரை ரத்து!

கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரையானது ஐக்கிய இராச்சியத்திலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் கடும் எதிர்ப்பால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கான நாமலின் இம்மாத இறுதி விஜயத்தில் ஒக்ஸ்போர்ட், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனுக்காக அன்றி தனது தனிப்பட்ட அரசியல் குரோதங்களை தீர்க்கவே சரத் பொன்சேகா அரசியல் செய்கின்றார்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் மக்கள் நலனுக்காக அன்றி, தனது தனிப்பட்ட அரசியல் குரோதங்களை தீர்த்துக்கொள்வதற்காகவே அரசியலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சரத் பொன்சேகா வெளியிடும் கருத்துக்கள் அவரது மட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு வினோதமாகத் தெரிந்தாலும், நாட்டின் புத்திசாலித்தனமான […]
செயற்கை நுண்ணறிவுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்!

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. 4 ஆம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அநுரகுமார திஸாநாயக்க உட்பட 20 […]
அமெரிக்கா மிகப் பெரிய அளவில் மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கிறது!

மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் […]
கடும் மழை; சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
கடும் மழை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள அறிவிப்பின்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு தொடர்பாக கருத்து மோதல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவர் அரச நிதியை மோசடி செய்து, தனது தாயின் கல்லறை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக, தொடுக்கப்பட்ட வழக்கு, அவர் ஜனாதிபதியானதும் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தற்போது அந்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய முடியுமாகி இருக்கின்றபோதும் ஏன் அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிரான குறித்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாமல் இருக்கிறது என அஜித் பி ரேரா, வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல […]
யாழில் இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள்!

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நேற்றைய தினம் (19) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வெத்தன்சிங்கன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் […]
வன்கூவரில் பணம் கேட்டு மிரட்டும் குற்றச்செயல்கள் குறித்த வழக்கு விசாரணைகள் ஆரம்பம்!

கனடா முழுவதும் குற்றங்களை கட்டுப்படுத்த ஒட்டாவாவில் புதிய நடவடிக்கைகளை அறிவித்துக்கொண்டிருக்கின்ற இவ் வேளையில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான வன்கூவரில் தற்போது பணம் பெறும் நோக்கில் குடியிருப்பாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை மிரட்டும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. வன்கூவர் காவல் துறைத் திணைக்களம்[Vancouver Police Department (VPD)] கடந்த புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, தற்போது முதல் நான்கு மிரட்டல் வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்குகள் குறித்து காவல்துறை மிகக் குறைந்த தகவல்களையே […]