“முழு நாடுமே ஒன்றாக” 99,000-க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 99,000-ஐத் தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறித்த நடவடிக்கையின் ஊடாக 137 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் 1,973 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் […]

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை

விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளது. பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜா-எல, கந்தானை பகுதியில் ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நபரிடமிருந்து 36 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக பணியகத்திற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் […]

அதிகளவு லிட்ரோ சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதைக் காணக்கூடியதாக இருந்தது. லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பல பகுதிகளில் நுகர்வோர் விசனம் தெரிவித்ததுடன், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது. ஆயினும், தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய […]

இலங்கை – இந்திய உறவுகளில் புதிய அத்தியாயம் ஆரம்பம்

செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில்(AI Impact 2026)’ பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பானது இன்று(20.2.2026)புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஐக்கியத்துடன் வரவேற்றார். தனது அழைப்பை ஏற்று சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றமைக்காக ஜனாதிபதி அநுரவுக்குப் பிரதமர் மோடி இதன்போது […]

யாழ். பல்கலைக்கழக வணிக பீட மாணவி 7 தங்கப் பதக்கங்கள் பெற்று சாதனை

யாழ். பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா ஏழு தங்கப் பதக்கங்கள் உட்படப் பணப்பரிசில்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார். பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று (20.02.2026) இடம்பெற்றுள்ளன. நேற்று (19) ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம், நாளை மறுதினம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை 12 அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய அமர்வில் முகாமைத்துவ […]

சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு!

வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரால் இதன்போது பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் குழு அறையில் 20.02.2026 இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை […]

மாகாணசபைத் தேர்தல் செயற்குழுவின் நடவடிக்கைகள் பற்றி சாணக்கியன் பிரேரணை

மாகாணசபைகள் தேர்தல் பற்றி ஆராய்வதற்கு விசேட செயற்குழுவை நியமித்தமைக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றுமாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அடுத்த பாராளுமன்ற அமர்வில் முதலாவது கூட்டத்தை நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தப்பாவை குழுவின் உறுப்பினராக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் […]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை –

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவரது சமூக வலைப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த நெரிசல் கொண்ட சுகாதார நிலையமாகும். இவ்வளவு பெரும் மக்கள் வருகையுள்ள சூழலில் வைத்தியசாலையை சுத்தமாகவும் சுகாதாரத் தரநிலைகளுக்கு இணங்கவும் பேணுவது எங்களின் முதன்மை பொறுப்பாகும். இத்தகைய நோக்கத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு […]

புதிய காற்றுச் சுழற்சி குறித்து வெளியான தகவல்

குறைந்த அழுத்தப் பிரதேசமானது வலுவிழந்து, இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்றைய தினம் (20.02.2026) பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முதல் ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு முதல் திருகோணமலை வரையிலான கடற்கரையோர கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கைக்கு கிழக்காக வங்காள […]

இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய இவரை கண்டால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும், வழங்கப்படும் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், பின்வரும் விவரங்களைக் கொண்ட சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரின் உடல் விளக்கம் உயரம்:- 5 அடி 5 அங்குலம். வயது:- 44 வயது. நிறம்:- கருப்பு, பழுப்பு நிற கண்கள் […]