பல பாகங்களில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய மழைப்பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செவ்வாய்க்கிழமை (17) அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார். இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால பொருளாதார மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பாராட்டியதுடன், ‘தித்வா’ சூறாவளியானது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், […]
சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கியுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சமன் ஏக்கநாயக்கவை தலா 02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் […]
ஆதரவற்ற பெண்களுக்கு 120 பேருக்கு அவசர மனிதாபிமான உதவி

CFLI நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் இயலாமையுடன் கூடிய பெண்களுக்கான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் CFLI நிறுவனத்தின் அமுலாக்கத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்களுக்கு தலா 35000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் முதல் நிகழ்வு கடந்த வருடம் 28.01.2025 இல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் […]
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மைத்திரி விக்ரமசிங்கவிற்கு அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை, எதிர்வரும் 20ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த விடயம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று புதன்கிழமை (18) அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் விசாரணை தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மைத்திரி விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பராக்கிரம திசாநாயக்க கடல்சார் மற்றும் தளவாடங்கள் துறையில் சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் ஒரு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுக கொள்கலன்கள் விவகாரம்: விசாரணை குழுவில் உபாலி

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்குட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினராக அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார். நிலையியற் கட்டளை 106 இன் விதிகளின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக்கவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே […]
பிரித்தானியாவில் மீண்டும் பனிப்பொழிவு

பிரித்தானியாவில் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலை ஏற்படவுள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை UK Health Security Agency (UKHSA) வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை 8 மணி வரை இந்த வானிலை எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை மீண்டும் உறையவைக்கும் பனிப்பொழிவு! விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | […]
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண 2026–2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் 2026–27 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பட்ஜெட்டில் வரிவிதிப்பு உயர்வுகள், 15,000 பொதுத்துறை பணியிடக் குறைப்புகள், மற்றும் 13 பில்லியன் டொலர் பற்றாக்குறை கணிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா அரசின் 2026 பட்ஜெட்டில் பல்வேறு வரி உயர்வுகள், மூலதனத் திட்டங்களில் தாமதங்கள், மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் 15,000 பொதுத்துறை வேலைவாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்திற்கும் குறிப்பிடத்தக்க நிதிப் பற்றாக்குறைகள் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. […]
கன்சர்வேட்டிவ் கட்சி ஒன்றுபட்ட கனடாவுக்காகப் போராடும் – பியர் பொய்லிவ்ரே

கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre)பிரிவினை அச்சுறுத்தல்களின் சூழலில் தேசிய ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில் தமது கட்சி செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அல்பெர்டாவில் மாகாணப் பிரிவினையை முன்னிறுத்தும் இயக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி ஒன்றுபட்ட கனடாவுக்காகப் போராடும் என அவர் குறிப்பிட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை நிருபரின் கேள்விக்கு பதிலளித்த போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் “முழுமையாக கூட்டாட்சி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட குழுவாக” இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஸ்ரே ப்ரீ அல்பெர்டா(Stay Free Alberta) […]