மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்?

மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர். மேலும், ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் சிறையிலிருப்பதாக அந்த அறிக்கையில் […]

பனிச்சரிவால் தடம்புரண்ட ரயில்

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு ஒன்றைத் தொடர்ந்து ரயில் ஒன்று தடம்புரண்டதாக சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. அந்த ரயிலில் சுமார் 80 பயணிகள் பயணித்த நிலையில், பல பயணிகள் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. நேற்று காலை 7.00 மணியளவில் Goppenstein என்னுமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், சுவிஸ் பொலிசார் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ’ரயில் தடம்புரண்டது, பலர் காயமடைந்திருக்கலாம்’ என்று மட்டும் […]

எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி; உயிர்த்த ஞாயிறு வழக்கு விவகாரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னர் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்டி வழக்கை தீர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார். கொழும்பில், 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை […]

வைத்தி்யர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகிறது!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத் திட்டத்தின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாக உள்ளதுடன், நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த அறிக்கைகள் உள்ளிட்ட நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்கு வழங்காமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் அச்சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார். வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் […]

இன்று பிரிட்டன் துணைப் பிரதமர் வருகிறார்

பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (16) இலங்கைக்கு இராஜதந்திரப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமையவுள்ளது. இந்தப் பயணத்தில் பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுகளை நடத்தவுள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சினையில் ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை!

மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா என்று இவ்வாறு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த […]

காங்கேசன்துறையில் இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டை கைப்பற்றி இந்திய மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் […]

முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா நேற்று திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார். வழக்கின் சாட்சி விசாரணை நடைபெறவிருந்த போதிலும், சட்டத்தரணிகளின் பணிபகிஸ்கரிப்பால் விசாரணை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் […]

கோப்பாயில் காணித் தகராறு; ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் காணித் தகராறு காரணமாக செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது)நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]