பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபரால் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம்: கண்டியில் சம்பவம்

கண்டியில் முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை தொடங்கியுள்ளது. பாடசாலைக்குள் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் சிறுமி பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவி மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை பெறப்படும் என கண்டி […]

அபுதாபியில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பலே வழக்கறிஞர் தம்பதி கொலைக்குக் காரணம்?

தலங்கம, அக்குரேகொடவில் ஒரு காரில் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொல்லும் திட்டம், அபுதாபியில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனிய சுத்தாவால் முழுமையாக திட்டமிடப்பட்டது என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கரந்தெனிய சுத்தா இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுடனும் பேசியதாகவும், அவர்களுடன் தொலைபேசியில் பேசி தாக்குதலுக்குத் தேவையான வழிமுறைகளைத் தொடர்ந்து வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது. கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்த இந்த வழக்கறிஞர், சமீபத்தில் சுத்தாவின் […]

அநுராதபுரத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதி!

அநுராதபுரம் – மஹவிலச்சிய வீதியில் லோலுகஸ்வெவ பகுதியில் சர்வதேச மட்டத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய விளையாட்டு மைதான தொகுதியினை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். சுமார் 250 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகளை இவ்வருடத்திற்குள்ளேயே மிக விரைவாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வீட்டுத்திட்டம்: விளையாட்டுத் […]

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நிகழ்கிறது. இந்தச் சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் மையப்பகுதியைச் சந்திரன் மறைத்து, சுற்றிலும் ஒரு “நெருப்பு வளையம்” போன்ற ஒளி வட்டத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே இதை வளையச் சூரிய கிரகணம் என்கிறார்கள். பொதுவாகக் கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியாகப் பல காரணங்களைக் குறிப்பிடுவார்கள். அதேபோல அறிவியல் ரீதியாகவும் இதற்கு விளக்கங்கள் இருக்கிறது. பொதுவாகச் சூரியனைச் சந்திரன் மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் நிகழ்கிறது. வழக்கமான சூரிய கிரகணத்தில் […]

நிரந்தர வீடு அற்ற குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொழும்பு நகர மறுமலர்ச்சி திட்டத்தின் ஊடாக 2026ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறும், நிரந்தர வீடு அற்ற குடும்பங்களுக்கு சுமார் 2,500 நகர்ப்புற வீடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு துரிதமாக அவை செயற்படுத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் ‘ஸ்டேடியம்கம’ வீட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை பிரதி அமைச்சர் ஆய்வு செய்வதற்கான செய்துள்ளார். இதன்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, […]

பிரித்தானிய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த பிரித்தானிய பிரதிப் பிரதமர் இலங்கை வருகை

பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும், ‘டித்வா’ (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரித்தானியாவின் மனிதாபிமான உதவிகளைப் பார்வையிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லமி இன்று ( பெப்ரவரி 17 ) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை பிரதிப் பிரதமர் சந்தித்து பொருளாதார ஒத்துழைப்பு, நல்லிணக்கம், மனிதாபிமான முன்னுரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய சாசனம் குறித்து கலந்துரையாடவுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் நாடளாவிய ரீதியில் […]

மடகாஸ்கரில் ஏற்பட்ட புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000 வீடுகள் சேதமடைந்து 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு கெசானி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கெசானி புயலானது கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள மடகாஸ்கரை தாக்கியுள்ளது. அங்குள்ள அட்சினானா மாகாணத்தில் உள்ள தமரினா நகர் பகுதியில் கரை கடந்தது. அப்போது பலத்த மழை, சூறாவளிக்காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் […]

18 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட்டுகளுடன் இலங்கையர் கைது

சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கையர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கம்பளை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை 02:45 மணி அளவில் ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் சார்ஜா நகரில் இருந்து ஏர் அரேபியா (Air Arabia) G-9587 விமானம் […]

யானை மோதியதில் ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த இரவு நேர ரயில், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கித்துல்லுத்துவ பகுதியில் வைத்து காட்டு யானை மோதியதில் தடம் புரண்டுள்ளதாக பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ரயிலுடன் மோதிய யானை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. இயந்திரத்தின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் தடம் புரண்டதால் ரயில் பாதையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக செவ்வாய்(17) திருகோணமலைக்கும் கல்ஓயா சந்திக்கும் இடையிலான ரயில் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன. இதே வேளை நீராவி […]

நியூசிலாந்தில் சூறாவளி

நியூசிலாந்தின் வட தீவுப் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை வீசி வரும் கடும் சூறாவளியினால் ஏற்பட்ட மழையினால் அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெலிங்டன் பகுதியில் மணிக்கு சுமார் 193 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான அதிவேகமாக வீசிய காற்றாகும். சில கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 240 கிலோ மீற்றர் வரை பதிவாகியுள்ளது. பலத்த காற்றினால் […]