தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசாங்கம் ரணிலை பின்பற்றுகின்றது – குமார் குணரட்னம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின்பற்றி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க நிறுத்திய இடத்திலிருந்து அவரது திட்டத்தை எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விதமாக தொடர்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 76 ஆண்டுகால பிரபுக்கள் ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வந்து சாதாரண பொது மக்களின் ஆட்சியை நிறுவ மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த அரசாங்கம் கடந்த […]
குற்றவாளிகளை உடனடி கைது செய்ய வலியுறுத்தல் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, கடும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இறுதியானதொரு சம்பவமாக இது இருத்தல் வேண்டும். இவ்வாறான சம்பவம் இனியொரு போதும் இடம்பெற கூடாது. அரசாங்கம் இதன் பொறுப்பை ஏற்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது […]
வாடகை கட்டுப்பாடு சட்டமூலங்கள் தொடர்பான அறிவிப்பு
அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் மற்றும் வீட்டு வாடகை சட்டமூலங்கள் மீதான நீதிமன்றத்தின் முடிவைப் பெற்றுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தற்போதைய வடிவில் இந்த சட்டமூலங்களை முன்னெடுத்துச் செல்லப் போவதில்லை என நீதி அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, இவை நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, புதிய சட்டமூலங்களாக மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மனுதாரர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் […]
அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் படுகாயம்!

மொனரகல புத்தல பகுதியில் வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று வயது மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மொனராகல வீதியின் நாமண்டிய பகுதியிலுள்ள வீட்டின் அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக 29 வயதான தந்தை திலுக்ஷ மதுசங்க, 26 வயதான தாய் சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயது மகள் ஒனல்யா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். மூவரும் மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
ஹிக்கடுவை கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை – நாரிகம கடலில் நீராடச்சென்ற மூன்றுபேர் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளான பொலிஸ் சார்ஜென்ட் ருவன், பொலிஸ் சார்ஜென்ட் லால், பொலிஸ் கான்ஸ்டபிள் வலிசிங்ஹ, பொலிஸ் கான்ஸ்டபிள் குமாரசிங்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ரந்துனு ஆகியோர் அவர்களை மீட்டு, அடிப்படை முதலுதவிகளை வழங்கியுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 37 வயதுடைய […]
வவுணதீவில் தனித்த மின்னேற்றி எரிசக்தி சேமிப்பு அமைப்பு?

இலங்கை தனியார் எரிசக்தி நிறுவனம் ஒன்று, வவுணதீவில் ஒரு தனித்த மின்னேற்றி எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்காக குறித்த நிறுவனம் பங்குச் சந்தை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் குறிப்பிடுகையில், “வவுணதீவு திட்டம் பதினைந்து (15) ஆண்டுகள் இயக்க ஒப்பந்தக் காலத்துடன் கட்டமைத்தல், சொந்தமாக்குதல் மற்றும் இயக்குதல் (BOO) மாதிரியின் கீழ் உருவாக்கப்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வசதி 10MW/40MWh மொத்த நிறுவப்பட்ட திறனைக் கொண்டிருக்கும் […]
வட லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை நோய்

வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் அம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ஃபீல்ட் […]
பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்களாதேசில் பதவியேற்பு

கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட தேசியவாத கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை பதவியேற்றனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம். நசீர் உதீன் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களைத் தவிர, தெரிவுசெய்யப்பட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற […]
வழக்கறிஞரும் மனைவியும் கொலை செய்யப்பட்ட அக்குரேகொட உயர் பாதுகாப்பு வலயமா?

சமீபத்தில் அக்குரேகொடவில் வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (17) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களுக்கும் அமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது ஒரு தனிமைப்பட்ட பிரச்சினை என்றும் தேசிய பாதுகாப்பில் […]
ஜிந்துப்பிட்டியில் சுட்டுக் கொல்லப்பட்ட மன்னார் இளைஞர் விவகாரம் : அவசர கலந்துரையாடல்

மன்னார் இளைஞர் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பாரதூரத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவசரமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16.02.2026) தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட அவர், அப்பாவி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குறிவைத்து சுடப்படுவது, சிவில் சமூகத்தின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இது குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததாவது, சட்டவிரோத ஆயுதக் கும்பல் கள் சுதந்திரமாக […]