சர்வதேச நாணய நிதிய பிரதானி புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு விஜயத்தை இன்று (17) மேற்கொண்டுள்ளார். அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜியேவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார். அனர்த்தத்தின் போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், […]
ஸ்கொட்லாந்தை வீழ்த்தி நேபாளம் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (17) ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் ஜோன்ஸ் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் 171 […]
நிதி மோசடி செய்த பிக்கு கைது
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி வட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, மோசடியான முறையில் பணத்தைச் சேகரித்த பிக்கு ஒருவர், மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணை அலகினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். முருதலாவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த போதே இந்த 21 வயதான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை […]
ஓய்வூதிய நீக்குதல் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றைய தினம் (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை […]
ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பயணமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (17) பிற்பகல் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் குழுவினால் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. […]
பின்வாங்கிய லொகோமோடிவ் ரயில் சாரதிகள்

தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய லொகோமோடிவ் ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் அறிவித்துள்ளனர். ரயில் லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இன்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்தனர். எனினும் அவ்வாறு பயிற்சியில் […]
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (17) பகல் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். கலைப்பீடத்தின் பொதுப் பட்டப்படிப்புக்கான (General Degree) கல்வி அலகுகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாணக் கோரியும், பயிற்சிக் கால (Internship) மாணவர்கள் அநீதியான முறையில் சுரண்டப்படுவதைத் தடுத்து முறையான கொள்கையொன்றை வகுக்கக் கோரியும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தின் செனட் மந்திரத்தை (Senate Building) வந்தடைந்த இந்தப் பேரணி, […]
கியூபெக் மாகாண மலைப்பகுதியில் இயந்திரத்தில் சிக்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கனடாவின் மேற்கு கியூபெக் மாகாணத்தின் மலைப்பகுதியில் கடுமையாக காயமடைந்த சிறுமி உயிரிழந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. CHEO மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வெக்ஃபீல்டு (Wakefield), குவெபெக் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்கீ லிப்ட் இயந்திரத்தில் உடை சிக்கி கடுமையாக காயமடைந்த 13 வயது சிறுமி உயிரிழந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 ஆம் திகதி அன்று வெக்ஃபீல்டு அருகிலுள்ள Centre Vorlage மையத்திற்கு வகுப்பு சுற்றுப்பயணமாகச் சென்றிருந்த சிறுமிஇ மலை உச்சியில் உள்ள சேர்-லிப்டிலிருந்து […]
சர்வதேச நாடுகளில் முன்னிலை வகிக்கும் இலங்கை

உலகில், 2026ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு மிகவும் மலிவு விலையில் செல்லக்கூடிய இடமாக இலங்கையை ஆங்கில பத்திரிகை பெயரிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு மலிவான இடங்களை பட்டியலிடும் சுற்றுலா ஆய்வு, டிசம்பர் மாத அறிக்கையை மேற்கோள் காட்டி இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை உண்மையான உலக மாதாந்திர வரவு – செலவு திட்டங்கள் மற்றும் அதன் உலகளாவிய வெளிநாட்டினரின் வலையமைப்பிலிருந்து நேரடி கணக்குகளின் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன், ஓய்வூதிய சேமிப்பு எவ்வளவு தூரம் நீட்டிக்க […]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தயாசிறியின் கட்சி உறுப்புரிமை குறித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தயாசிறி ஜயசேகர பணியாற்றுவதற்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு […]