விவசாயப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய கூட்டத்தில் முறுகல்: ஒருவர் கைது
பிரதேசத்தின் விவசாயப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (15) சூரியவெவ, அந்தரவெவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது, இரு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தக் கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அங்கு ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது, மற்றொருவர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்பாட்டாளர்கள் குறித்த நபரையும் அவருடன் வந்தவர்களையும் கூட்ட இடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதன்போது இந்த அமைதியின்மை […]
போர் முடிவுக்கு வந்து நீண்ட வருடங்களாகின்ற போதிலும், மக்களின் உள்ளங்களில் இன்னும் அமைதி ஏற்படவில்லை!

நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட வருடங்களாகின்ற போதிலும், மக்களின் உள்ளங்களில் இன்னும் அமைதி ஏற்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குறிப்பாக, தங்கள் குடும்பங்களுக்கு என்ன நேர்ந்தது என்று கூடத் தெரியாமல் தவிக்கும் பெண்கள் இன்னும் நம்மிடையே இருக்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். மன்னார், அடம்பன் பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் மொத்த […]
அபிவிருத்தி முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடிவு
சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, 50 மில்லியன் டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரையிலான முதலீடுகளுக்கு இந்த வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன. குறித்த முதலீட்டின் மூலம் குறைந்தது 50 உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என […]
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் […]
பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் – 8 சுற்றில் இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி பெற்றுள்ளது. குழு ஏயில் ஐக்கிய அமெரிக்கா, நமீபியாவை ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் முடிவுக்கு வந்த பாகிஸ்தானுடனான போட்டியில் வென்றதன் மூலமே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் – 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் இந்தியா: 175/7 (20 ஓவ. ) […]
அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளதாக, ஆசியாவின் அரச மற்றும் தனியார் துறைகள் தொடர்பான மூலோபாய பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் சுயாதீன நிறுவனமான Verité Research தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கெலப் (Gallup) பாணியிலான “நாட்டின் மனநிலை” (Mood of the Nation) எனும் சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆய்வின் ஊடாகவே இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு வருடகால கருத்துக்கணிப்பு வரலாற்றில், நாட்டின் நிலைமை குறித்த மக்களின் திருப்தி நிலையானது 50% […]
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நால்வர் அடையாளம்!
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார். “இந்தக் குற்றவாளிகள் பயணித்ததாகக் கூறப்படும் வாகனம் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக ஊடகங்களில் எவ்வளவு தகவல்கள் வெளியானாலும், […]