உட்கட்சி விவகாரத்தை பகிரங்கப்படுத்த முடியாது: சிறீதரனின் பதவி நீக்கம் பற்றி எம்.ஏ. சுமந்திரன்

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறீதரன் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட மக்கள் […]

ஜெஃப்ரி எப்ஸ்டீன்பிரேத பரிசோதனை அறிக்கை; கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்?

உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் தற்போது மிக பிரபலமாகியுள்ள நிலையில் எப்ஸ்டீனின் மரணம் தவறான முடிவெடுத்தால் நிகழ்ந்ததாக தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் […]

வெடுக்குநாறி மலையில் மகா சிவராத்திரி வழிபாடுகள்

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இதன்போது, எந்தவித குழப்பமுமின்றி மகா சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்ற வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப்பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இம்முறை குறித்த பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கு வழியமைத்து […]

உலக சுற்றுலாத்துறையில் திருப்பு முனைகள்!

2025 ஆம் ஆண்டில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய World Tourism Barometer அறிக்கையின்படி, சர்வதேச வருகை உலகளவில் 4வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது 2009 முதல் 2019 வரையான தொற்றுநோய்க்கு முந்தைய காலப்பகுதியில் நிலவிய 5வீத சராசரி வளர்ச்சியை நெருங்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா தொடர்ந்தும் உலகின் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பிராந்தியமாக நீடிக்கிறது. அங்கு சுமார் 800 மில்லியன் […]

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பம் விளைவித்தவர்கள் கைது

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (15.02.2026) இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பார்வையிட அனுமதிக்குமாறு அங்கு காவலுக்கு நின்ற காவலாளியிடம் கோரியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையின் கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி […]

ஏஐ உச்சி மாநாடு ஆரம்பம்!

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ. தாக்கம் உச்சி மாநாடு நேற்று முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதனுடன் அதே மண்டபத்தில் ‘இந்திய ஏ.ஐ. தாக்கம் கண்காட்சி-2026’ என்ற கண்காட்சியும் இதே காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ. துறையில் இந்திய மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கும்வகையில் இக்கண் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி […]

20ஆம் திகதி மின்சக்தி குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம்

மின்சக்தித் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கமைய, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் இந்த யோசனை அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நிலக்கரி இறக்குமதியின் போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வரும் பின்னணியில் இந்த விவாதம் நடைபெறுவது விசேட அம்சமாகும். இதேவேளை, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் […]

தேசிய பாதுகாப்பிற்கு விசேட பாதிப்பு எதுவும் இல்லை

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இது குறித்து புரிதலுடன் இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். “தேசிய பாதுகாப்பிற்கு விசேட பாதிப்பு எதுவும் இல்லை. வெவ்வேறு குழுக்களுக்கு கடந்த காலத்திலும் கலகங்களை விளைவிப்பது, இனவாதத்தைத் தூண்டுவது போன்ற விடயங்கள் பழக்கப்பட்டிருந்தது. இப்படியானவர்கள் தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளத் தேவைப்படும்போது பல்வேறு விடயங்களைச் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் […]

போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன், இவர்களில் ஆண்கள் இருவர் 33 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும், பெண் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் மசாஜ் நிலையமொன்றை நடத்தி வருபவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. […]

இன்று அனைத்து சட்டத்தரணிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகல்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் […]