பிரித்தானிய,கனேடிய பயணிகளுக்கு சீனா வழங்கும் விசா சலுகை

சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய (UK) மற்றும் கனடா நாட்டு குடிமக்களுக்கு விசா இல்லா பயணச் சலுகையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிச் செய்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று(15.02.2026) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின்படி, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் இவ்விரு நாட்டு குடிமக்களும் வரும் பெப்ரவரி 17ஆம் 2026 முதல் சீனாவிற்குள் விசா இன்றி நுழையலாம். சுற்றுலா, வணிகம், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது போக்குவரத்து (Transit) போன்ற காரணங்களுக்காகச் செல்பவர்கள் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை […]

இலங்கைத் தமிழர்கள் குறித்து மோடியிடம் ஸ்டாலின் முன்வைத்த அவசர கோரிக்கை

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை

இந்திய மாநிலமான தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ்நாட்டில் சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள், அகதி முகாம்களிலும், அதற்கு வெளியேயும் வசிப்பதாக ஸ்டாலின் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், இந்தியாவில் பிறந்தவர்கள் என்றும் அந்த […]

‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாமல் ராஜபக்ச கிரிஷ் வழக்கு

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (16.02.2026) நீதிமன்றப் பணிகளில் இருந்து விலக வழக்கறிஞர்கள் முடிவு செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைகியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கை பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு […]

இணையவழி போராட்டம் இன்று ஆரம்பம்

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து “புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று(16.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(16) திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம், இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்! இணையவழி போராட்டம் இன்று ஆரம்பம் | Online Signature […]

கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி

கிளிநொச்சி நீர் விநியோக திட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நலன்கருதி […]

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை

அலெக்ஸி நவால்னி மரணம் நஞ்சு

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவின் ஈக்வடோர் பகுதியில் காணப்படும் ஒரு வகை விஷத் தவளைகளின் நஞ்சை பயன்படுத்தித் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஈவெட் கூப்பர் தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு சைபீரிய சிறையில் நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த ஐந்து ஐரோப்பிய ஆய்வகங்கள், ‘எபிபாடிடைன்’ என்ற கொடிய நச்சு அவரது உடலில் இருந்ததை உறுதி செய்துள்ளன. […]

நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 29 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியா நைஜர் மாநில தாக்குதல்

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் சுமார் 41 மோட்டார் சைக்கிள்களில் வந்த இந்தக் கும்பல், தலா இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் துங்கா-மேகேரி, கொன்கோசோ மற்றும் பிசா ஆகிய மூன்று கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தத் தாக்குதலில் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், அடையாளம் தெரியாத எண்ணிக்கையிலான மக்கள் […]

ஏப்ரல் முதல் வாகன விலைகளில் பாரிய மாற்றம்?

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாகன விலைகள் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சுங்க வரியில் இரண்டரை சதவீதம் (2.5%) வரி விதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் மேலும் தகவலளிக்கையில், அந்த வகையில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள வாகனத்தின் விலையானது 250,000 ரூபாவால் அதிகரிக்கும். இந்த வரி முன்பு 1.25 சதவீதமாக […]

கனடா வின்னிபெக் காவல் துறை தலைமையகத்தில் நீர்ப்பெருக்கு!

வின்னிபெக் காவல் துறை தலைமையகத்தில் ஏற்பட்ட பெருமளவான நீர்ப்பெருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் ஒருவர் ஆணும் ஒருபெண்ணும் v(சேதப்படுத்தல்)விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நகர மையத்தில் அமைந்துள்ள 266 கிரேஹாம் அவென்யூ அலுவலகக் கோபுரப் பகுதியில் சனிக்கிழமை மாலை நீர் சொட்டத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இருவர் கோபுரக் கட்டிடத்தின் மேல்தள படிக்கட்டுப் பகுதிகளில் அமைந்திருந்த அவசர […]

ஒன்டாரியோவின் வாகனத் தொழில் துறையின் அடுத்த மைல்கல்

கனடிய சர்வதேச ஆட்டோஷோ (Canadian International Auto Show) நிகழ்வில், உலகத் தரத்திலான எங்கள் வாகனத் தொழிலாளர்களால் ஒன்டாரியோவில் தயாரிக்கப்பட்ட தற்போது தயாரிக்கப்பட்ட மற்றும் மிகச் சிறந்த வாகனங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் லிங்டின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிகழ்வு, ஒன்டாரியோவின் வாகனத் தொழில் துறையை உலகிலேயே சிறந்ததாக்கும் அனைத்து அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஒரு அபூர்வமான காட்சியாக திகழ்கிறது எனவும் இதுபற்றி அவர் சிலாகித்து […]