சிறார் குற்றவாளிகளின் வயது 14 ஆக குறைப்பு

ஆர்ஜென்டீனாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் குற்றச் செயல்க ளைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் படி, சிறார் குற்றவாளிகளாக கருதப்படும் வயது வரம்பை 16-லிருந்து 14 ஆக குறைக்கும் சட்டமூலத்தை அந்நாட்டு ஜனாதிபதி ஜேவியர் மிலே தலைமையிலான அரசு பாராளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றியது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் சிறுவர்களைப் பயன்படுத்தி படு கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத் துறை […]
சூடானில் 6000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குற்றச்சாட்டு

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இராணுவம் தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான ‘சூடான் ஆயுதப் படைகள் செயல்படுகின்றன. துணை இராணுவம் தரப்பில் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப். எனப்படும் விரைவு அதிரடிப் படை செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இருவரும் இணைந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிறகு துணை […]
அக்குரேகொட இரட்டைக் கொலை: இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
26 பாடசாலை வாகனங்களுக்குத் தடை

திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் போக்குவரத்துக்குத் தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்டு அவற்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். தெபரவெவ ஜனாதிபதி வித்தியாலயத்திற்கு முன்னால் குறித்த வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மோட்டார் வாகனப் பரிசோதகர்களின் பங்கேற்புடன் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது 29 வாகனங்கள் சோதனையிடப்பட்ட நிலையில், அவற்றில் 26 வாகனங்கள் (சுமார் […]
பரீட்சை: அவசர இலக்கங்கள் அறிவிப்பு

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பத்திலோ அல்லது […]
நாளை ஜனாதிபதி இந்தியா விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) பிற்பகல் இந்தியா நோக்கிப் புறப்படவுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள […]
ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பாலேயே பாகிஸ்தான் அணி இலங்கை வந்தது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போட்டியில் பங்கேற்கத் தீர்மானித்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி தெரிவித்தார். இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாகிஸ்தான் பிரதமரின் சார்பில் ஜனாதிபதிக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற இருபதுக்கு […]
இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான இன்று (16) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜாக்ஸ் 53 ஓட்டங்களை […]
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது
இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (தாழமுக்கம்) ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தக் கடற்பரப்பில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினரை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது. எவ்வாறாயினும், […]
நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யூ. பின்னலந்த இது தொடர்பில் விளக்கமளித்தார். அதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 140 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 130 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இம்முறை நெல் கொள்வனவுக்காக 10 […]