இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன!

இந்த வருட இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி இன்று (15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது இத்தொடரின் ‘A’ குழுவிற்கான போட்டியாக நடைபெறுகின்றது. இதற்கிடையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை திட்டமிட்டபடி விசேட பாதுகாப்புக்கு மத்தியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் […]

பல பகுதிகளில் மழை!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (15) அதிகாலை விடுக்கப்பட்ட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. […]

இன்று மகா சிவராத்திரி

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. 2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று (15) பக்திப் பெருக்குடன் அனுசரிக்கப்படுகிறது. சிவராத்திரி கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் “யார் பெரியவர்?” என்ற போட்டி எழுந்தபோது, சிவன் ஒரு பெரும் ஜோதிப் பிழம்பாகத் தோன்றினார். அதன் அடி மற்றும் முடியைக் காண […]