ஓமந்தை கமநலசேவை அணைக்கட்டு நீர்ப்பாசன வாய்க்காலை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை

வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்குரிய அணைக்கட்டை அமைப்பதுடன், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடியவிரைவில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு குறித்த புல்மோட்டை வெளிக்குரிய அணைக்கட்டை அமைக்கவும், நீர்ப்பாசன வாய்க்காலைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென வவுனியா பிரதேசசெயலாளர் மற்றும் ஓமந்தை கமநல […]
கும்புக்கன் ஓயா வனப்பகுதியில் புதையல் தோண்டிய 06 பேர் கைது
லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகொல்ல – கும்புக்கன் ஓயா வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஆறு சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை (14) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்கள் 49 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் லுணுகலை, எம்பிலிப்பிட்டிய, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்தோட்ட முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது. இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் […]
மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் முன்னெடுக்கப்படும் நிலக்கரி கொள்முதல் நடவடிக்கைகளில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் மின்சார சபைக்கும் மக்களுக்கும் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க குற்றம் சுமத்தியுள்ளார். மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் காலக்கெடு குறைப்பு தற்போதைய நிலக்கரி கொள்முதல் […]
சித்திரை புத்தாண்டுக்கு முன் வலி.வடக்கில் காணிகளில் ஒரு தொகுதியை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் […]
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் – அம்பிகா சற்குணநாதன்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசியமக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து அவ்வதிகாரிகளுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் […]
மார்ச் மாதம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாடு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 11 ஆவது மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு கட்சியின் மத்திய குழுதீர்மானித்துள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மத்திய குழுவின் இறுதிக்கூட்டம் சனிக்கிழமை (14) காலை 10.00 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாக ரீதியிலான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், கட்சியின் மாநாட்டை நடாத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. அதற்கமைய கட்சியின் 11 ஆவது […]
ஹட்டனிலிருந்து நுவரெலியா காயத்ரி பீடம் இந்து ஆலயம் வரை சிவலிங்கத்தை ஏந்தியவாறு பாதயாத்திரை

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, ஹட்டனிலிருந்து நுவரெலியா காயத்ரி பீடம் இந்து ஆலயம் வரை சிவலிங்கத்தை ஏந்தியவாறு பாதயாத்திரை ஒன்றை மேற்கொள்ள இந்து மதகுரு ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஹட்டன் ஓம் ஸ்ரீ ராஜேஸ்வரி இந்து ஆலயத்தில் இருந்து கடந்த 14ஆம் திகதி சிவ பீடம் தியா சுவாமி என்ற மதகுரு, விசேட பூஜைகளை நடத்தி அங்கிருந்து சிவலிங்கத்தை ஏந்தியவாறு நுவரெலியா காயத்ரி பீடம் இந்து ஆலயம் வரை தனது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளார்.
பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞன் பலி

பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞன், விடிய விடிய விளையாடியதில் அவருக்கு எதிர்பாராத விதமாக இரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில், மூளையில் இரத்த நாளம் வெடித்துள்ளது. அவருக்கு உடனடியாகத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வேலைக்கு நடுவே சற்று நேரம் கேம் விளையாடுவது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். ஆனால், இந்தக் காலத்தில் சிலர் வீடியோ கேம்களுக்கே அடிமையாகிவிடுகிறார்கள். இரவு முழுவதும் கூட கேம் விளையாடுகிறார்கள். அப்படி விளையாடும்போது அவர்களுக்கு மோசமான உடல்நிலை […]
6 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது

சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14, ஸ்டேடியம்கம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரிடமிருந்து 271 கிலோ 835 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ராகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் வைத்து சந்தேக நபர் கைது […]