இரட்டைக்கொலை: விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள்

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை […]

புதிய அரசியலமைப்பு; நடைமுறைக்குச் சாத்தியமில்லை – கலாநிதி சரத் அமுனுகம

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும். அதனை தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடலை ஆரம்பிக்கின்றபோது நடைமுறையில் சாத்தியமாகாத நிலைமையே மீண்டும் உருவாகும் என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இலங்கை மன்றக்கல்லூரியில் வன்டெக்ஸ்ட் இன்னிஸியேட்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் ‘இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு: ஒரு உள்ளக பார்வை’ எனும் நூல் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் […]

தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் நாட்டின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்து

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான்கு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிய போதிலும், இதுவரை அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதி அமைச்சர் முனீர் […]

இன்றைய வானிலை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் […]