பொதுமக்களின் உடமைத் திருட்டு; கனடா மிசிசாகா நகரில் பல வழக்குகள் பதிவு!

கனடா மிசிசாகா நகரில் இடம்பெற்ற உடைமையைத் திருடல் சம்பவங்களையடுத்து இரண்டு இளைஞர்களை பீல் பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நவம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 மாதங்களில் காவல்துறையினர் 35க்கும் மேற்பட்ட உடைமையைத் திருடல் சம்பவங்களின் அறிக்கைகளைப் பெற்றுள்ளனர். இந்த குற்றச் சம்பவங்களில் 2007 ஆண்டு வெள்ளி நிற அக்யூரா RDX மற்றும் 2009 ஆண்டு ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட பல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. சாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகளால் பெப்ரவரி 10-ஆம் தேதி மிஸ்ஸிசோகாவின் […]
பிராம்ப்டன் மாநகரின் இஃப்தார் நிகழ்ச்சி!

எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதியன்று பிராம்ப்டனின் இஃப்தார் நிகழ்ச்சி பிராம்ப்டனின் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பிராம்ப்டனின் நகராட்சி தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நகரின் மேயர் பற்றிக் பிரவுண் மற்றும் கவுன்சிலர்களுடன் பிராம்ப்டன் குடிமக்கள் பிரார்த்தனை, இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கேன் வில்லன்ஸ் சதுக்கத்தில் கனடாவின் மிகப்பெரிய ரமலான் முபாரக் குறிப்பு வெளிப்படுத்தப்படும். இந்த நிகழ்வானது ரமலான் லைட்ஸ் கனடா மற்றும் கனேடிய முஸ்லிம் வோட் இணைந்து […]
ஒன்ராறியோ முதல்வர் லண்டன் விஜயம்

நேற்று இரவு லண்டன் ‘பொலிஸ் சீஃப்ஸ் காலா’வில் கலந்து கொண்டது மிகச் சிறப்பாக இருந்தது என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது லிங்டின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கனேடிய சீருடையில் அங்கே பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் சேவைக்காக நன்றி தெரிவிக்கவும், பெத்தனீஸ் ஹோப் ஃபவுண்டேஷன் மற்றும் விக்டிம் சர்வீசஸ் ஆஃப் மிடில்செக்ஸ்-லண்டன் போன்ற முக்கியமான உள்ளூர் அமைப்புகளை ஆதரிக்கவும் ‘பொலிஸ் சீஃப்ஸ் காலா’வில் அனைவரும் ஒன்றிணைந்தோம் முதல்வர் டக் பேர்ட் மேலும் குறிபிபிட்டிருக்கின்றார்.
சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது,’டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் நேரில் பார்வையிட உள்ளார். அத்துடன், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடுவார். ‘டிட்வா சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சுமார் 206 மில்லியன் டொலர் அவசர […]
வரி வருமானத்தை அதிகரிக்க மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்திறனாகவும் முன்னெடுப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்ட மதுவரி வருமான முகாமைத்துவக் கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் அரச […]
கொள்கலன் விசாரணைக் குழுவிலிருந்து அமைச்சர் விலகல்?

சர்ச்சைக்குரிய கொள்கலன் விசாரணைக் குழுவிலிருந்து அமைச்சர் அனுர கருணாதிலக்க விலகல் கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையில் 2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் […]
அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பு மோசடி: இரு இளைஞர்கள் கைது
அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நகரில் விசா ஆலோசனை மையம் ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி, அதன் ஊடாக அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகத் தெரிவித்து இவர்கள் பணமோசடி செய்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு வாக்குறுதியளித்தபடி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு […]
கரைவலை மீனவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், 2010 ஆம் ஆண்டு தொடங்கி, தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் வின்ச் இயந்திரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் கரைவலை மீன்பிடித் தொழில்துறையின் தற்போதைய நிலைமை குறித்து […]
பாகிஸ்தானுடன் மோத இலங்கை வந்தது இந்திய அணி!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்தது. இந்திய கிரிக்கெட் அணியுடன் 41 பேர் கொண்ட குழு, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 12 அதிகாரிகள் இவ்வாறு வருகை விமான நிலையச் செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் நாளை 15ஆம் திகதி கொழும்பு ஆர். […]
கஸ்ஸப தேரரின் கருத்துக்கள் பொய்யனவையென அறிவிப்பு!

தன்னைப் பற்றி ஊடகங்களுக்குப் பொய்யான கூற்றுக்களைத் தெரிவிப்பதன் மூலம் பலங்கொட கஸ்ஸப தேரர் எதிர்பார்க்கும் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். தாமோ அல்லது தனது பிரதிநிதி ஒருவரோ பலங்கொட கஸ்ஸப தேரருக்குப் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி […]