அமரகீர்த்தி கொலை வழக்கு; இரு தரப்பிலிருந்தும் மேன்முறையீடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு தீர்ப்பிற்கு எதிராக அரச தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு என்பன மேன்முறையீடு செய்யத் தீாமானித்துள்ளன. கம்பஹா மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, நீதிபதிகள் மத்தியில் கருத்து வேறுபாடு […]
கடும் பனிமூட்டமாக நுவரெலியா

நுவரெலியா சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (14) காலை முதல் தொடர்ந்து கடுமையான மழையுடன் பனிமூட்டம் நிலவி காணப்படுகின்றன கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. நுவரெலியா,கந்தபளை,நானுஓயா,லிந்துலை போன்ற இடங்களில் கடுமையான மழையுடன் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் நுவரெலியா – பதுளை பிரதான வீதி , நுவரெலியா – ஹட்டன் பிரதான […]
பெப்ரவரி 25 முதல் பிரித்தானியா செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு?

பெப்ரவரி 25 முதல் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யும் இரட்டை (Dual) குடியுரிமை கொண்ட பிரித்தானிய நபர்கள், கட்டாயமாக செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அல்லது “Certificate of Entitlement” ஆவணத்தை காட்ட வேண்டியிருக்கும் என உள்துறை அமைச்சகம் (Home Office) எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய குடியுரிமையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையும் என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் நிலையில், […]
சிறிலங்கா டெலிகொம் பெயரைக் குறிப்பிட்டு திருகோணமலையில் பணமோசடி!

சிறிலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, பொதுமக்களின் வங்கி விபரங்களைப் பெற்று பணத்தைச் சூறையாடும் பாரிய மோசடி ஒன்று திருகோணமலை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (12) இவ்வாறானதொரு மோசடிக்கு இலக்காகி தம்பதியினர் ஒருவர் பெரும் தொகையை இழந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர்கள், தாம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். “நீங்கள் நீண்டகாலமாக எமது வாடிக்கையாளராக இருப்பதால், உங்கள் கணக்கில் 1,20,000 ரூபா […]
தமிழ் மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும்!
நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தமிழ் மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும். முஸ்லிம் மக்களின் ஆதரவு எப்போதும் சஜித்துக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மக்களின் அனைத்து வாக்குகளும் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் என்றார். தனது சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நாமலுக்கு மறுபடியும் எமது மக்கள் வடக்கு மக்கள் வாக்களிக்கப் […]
‘இந்தியா – AI உச்சி மாநாடு 2026’;20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு!

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI உச்சி மாநாடு 2026’ இல் (India–AI Impact Summit 2026) கலந்து கொள்ள 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாடு புதுடெல்லியில் பெப்ரவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்வரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்: பூட்டான் – பிரதமர் ஷெரிங் […]
பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அதிகரிப்பு
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால ஆய்வுகளின்படி, டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்படும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை, பரிசோதிக்கப்பட்ட பாடசாலைகளில் 40 சதவீதமானவற்றில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுவதாகக் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சை நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகைத்தல் (Fumigation) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் […]
கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் இரு தொழிலாளர்கள் பலி!

பண்டாரவளை – லியங்கஹவெல, மாப்பிட்டிய பகுதியில் உள்ள கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாறைகளுக்கு அடியில் சிக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை – பூனாகலை வீதியில் 16-17 கிலோமீற்றர் தூண்களுக்கு இடையில் இந்த கல்குவாரி அமைந்துள்ளது.
போதைப்பொருளுடன் டிங்கி படகு கைப்பற்றல்

மன்னார் கடற்பரப்பில், போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, குறித்த படகில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படகில் சந்தேகிக்கப்படும் இரண்டு பைகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
14 ஆண்டுகளின் பின் அவசர கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று காலை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டமொன்று நாளை (15) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதிக்கும் ஒரு சம்பவமாகும். இது எமது […]