விசேட தேடுதல் நடவடிக்கை: 585 பேர் கைது
ற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 29,367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையளம் காணப்பட்டுள்ளதுடன், 142 திறந்த பிடியாணை உத்தரவு […]
உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி
2026 ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு 6.824 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது இது 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவாகியிருந்த 6.838 பில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத சிறிய வீழ்ச்சியாகும். எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு 2025 டிசம்பரில் காணப்பட்ட 86 மில்லியன் டொலர்களிலிருந்து, 2026 ஜனவரியில் 109 மில்லியன் டொலர்கள் வரை 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த மாதத்தில் […]
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சிக்கல்!
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (14) அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா நான்கு மாதங்களுக்கு முன்னர் 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த காலப்பகுதிகளில் இலவச விசா வழங்க நாம் விரும்பினோம். இது குறித்து […]
பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க நடவடிக்கை

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டணத்தெரு பகுதி அண்மையில் கடலரிப்பு மூலமாக மிகவும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றும் கடலுக்கடியில் தாழ் இறங்கியுள்ளது. குறித்த கரையோர பகுதியை சீரமைக்கும் பணி சனிக்கிழமை (14) திருகோணமலை மாநகர சபை, பட்டினத்தெரு மீனவர்கள், இளைஞர்கள் இணைந்து கடலரிப்பில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இவ்வாறான நிலையில் இதனை பார்வையிட. இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை […]
ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

அமெரிக்கா – கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (13) ஹவானா வளைகுடாவில் உள்ள ‘நிக்கோ லோபஸ்’ (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட இந்தத் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு […]
கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்

கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 செப்டம்பர் முதல் சர்வதேச கடல் பரப்பில் அமெரிக்கா நடத்தி வரும் இத்தகைய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க தெற்கு கட்டளைப்பீடம் (SOUTHCOM), வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இந்த “உயிர்க்கொல்லி தாக்குதலை” (Lethal kinetic strike) நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் […]
ஏர் இந்தியா விமான விபத்து ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு இந்தியாவின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து இயந்திரக் கோளாறினால் ஏற்பட்டதல்ல; மாறாக, எரிபொருள் வழங்கல் கைமுறையாக நிறுத்தப்பட்டதன் (Intentional Manual Fuel Cut-off) விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என இத்தாலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கொரியர் டெல்லா செரா’ (Corriere della Sera) நாளிதழ், விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜூன் மாதம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா 171 விமானத்தின் விபத்து […]
மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது!
மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.
முக்கிய அறிவியல் விதி டொனால்ட் ட்ரம்ப்பினால் ரத்து!

புவி வெப்பமடைவதற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படையாக விளங்கிய 2009ஆம் ஆண்டின் “ஆபத்து கண்டறிதல்” என்ற முக்கிய அறிவியல் விதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார். அத்துடன், இந்த ஒபாமா ஆட்சியில் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்குறிப்பிடப்படும் விதியானது, காபனீரொக்சைட்டு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கியது. […]
தொடர் கொள்ளை: கணவன் – மனைவி உட்பட மூவர் கைது
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை இன்று(14.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார். […]