சோமரதன தேரர் SLPPயில் இருந்து விலகி சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய வணக்கத்திற்குரிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய, அவர் சர்வஜன அதிகாரம் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். திஸ்ஸகுட்டி ஆராச்சி அநுராதபுர மக்கள் தொடர்பில் வெளியிடும் சில கருத்துக்களும் அவரது செயற்பாடுகளுமே தாம் கட்சியிலிருந்து விலகக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலை தொடர்ந்தால், அநுராதபுர மாவட்டத்தில் […]
ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!
கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது – முஜிபுர் ரஹ்மான்
ஜனாதிபதி அநுரகுமார சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகின்ற போதிலும் அது அவ்வாறில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி ஏற்ற காலம் முதல் இவ்வாறு கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு மேலே இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரச்சினையின் போதும், இரத்தினபுரியில் இடம்பெற்ற பிரச்சினையயின் போதும் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது […]
பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆபத்தில் உள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்த பகுதிகளில் உள்ள கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று அமைப்பின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். அதன்படி, மக்கள் வீதிகளைப் பயன்படுத்தும் போது, பாடசாலைகளின் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் […]
குழந்தையை கொலை செய்த தாயின் முறையற்ற உறவு!
ஹோமாகம பகுதியில் வசிக்கும் பெண்ணின் மூன்று வயது மகள், திருமணத்திற்கு புறம்பான காதலனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தையைச் சேர்ந்த பெண்ணின் மகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையின் பின்னர் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், மகளின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலை குழந்தை தாக்கப்பட்டு வெளியே அழைத்து செல்லப்பட்ட நிலையில், மாலையில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளது. ஆனால் மாலை ஏதோ ஒவ்வாமை […]
பிரதமர் மோடி மீது அதிருப்தி!

இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் சமரசம் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்தார். இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதைத் […]
திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

திருச்சி அரசு மருத்துவமனையில் காணாமல்போன குழந்தை மீட்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த பிப். 11 ஆம் தேதி விக்னேஷ்- சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதாகக் கூறி பெண் ஒருவர் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார். குழந்தை காணாமல் போனதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில், குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையைக் கடத்திய பெண்ணை துறையூர் அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தை […]
தேர்தலில் திமுகவின் வெற்றி ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடியதாக இருக்க வேண்டும்!

மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம் என்று திருப்பத்தூர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 47 தொகுதிகளுக்கான திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு ஜோலார்பேட்டை மண்டலவாடியில் இன்று(பிப். 14) நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது: மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல்! எதிர்வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது […]
இந்தியாவில் ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்த பல லட்சம் பணத்துடன் வேன் சாரதி ஓட்டம்!

இந்தியாவில் ஐதாரபாத் அருகே திருமலகிரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அஜித் குமார் என்பவர் சாரதியாக பணியாற்றி வந்தார். அவர் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தை இயக்கி வந்தார். நேற்று முன்தினம் மதியம் அவர், வழக்கம்போல தனது அலுவலக குழுவினருடன் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்தார். சில தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை நிரப்பினர். மாலை 4.30 மணிக்கு கோபனபள்ளி பகுதிக்கு வந்தனர். பாதுகாவலர்கள் கொஞ்சம் பணத்துடன் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை […]
13 வயது சிறுமி கிம் ஜு யே வடகொரியாவின் அடுத்த தலைவர்?

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அடுத்த அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர் என்ற நிலையை கிம் ஜு யே எட்டியுள்ளதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பான NIS தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார். அதைத்தொடர்ந்து கிம் ஜு […]