வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்த முன்மொழிவு; அதன் உள்ளடக்கங்கள் ஆபத்தானவை – தயாசிறி

இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு நிலத்தடி, கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பது குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருணாகலில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், […]

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் – இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் […]

இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பங்கசு தொற்றுடைய மிளகாய்த்தூள் உற்பத்தி செய்தவருக்கு சிறை

யாழில் பங்கசு தொற்றுடைய “மிளகாய் தூளை” உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குறித்த மிளகாய் தூளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டு , கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிகண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகரான மதியானந்தகுரு நந்தகுமார் வியாபர நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது, பங்கஸ் தொற்றுடன் மிளகாய் தூளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கும், குறித்த கட்டை தூளை உற்பத்தி […]

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் மற்றும் கொழும்பு கங்காராமய விகாரையின் விஹாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காராமய விகாரையில் வியாழக்கிழமை (12) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான மத மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

சற்றுமுன் களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த […]

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது

தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விட்டு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற ஆரம்பக்கால நிலைப்பாடு பிற்பட்ட காலத்தில் தவறாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாதென முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை மன்றக்கல்லூரியில் வன்டெக்ஸ்ட் இன்னிஸியேட்வின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற அவரது ‘இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு: ஒரு உள்ளக பார்வை’ எனும் நூல் பற்றி நடைபெற்ற […]

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது

பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கடந்த 08ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 32 வயது சந்தேகநபர், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதற்கமைய, சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட்டி, பேலியகொட, தெமட்டகொட, தலங்கம, கொத்தட்டுவ, மருதானை, குருந்துவத்த, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பகுதிகளில் 08 மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் […]

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; ரசிகர்கள் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சுற்றித்திரிய வேண்டாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் இல்லாத ரசிகர்கள், டிக்கெட் பெறும் நோக்கத்தில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சுற்றித்திரிய வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி […]

சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்களிடம் உதவி கோரல்

ரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்களிடம் உதவி கோரல் தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற இரட்டை மனிதக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இக்குற்றத்தைச் செய்த துப்பாக்கிதாரிகள் ஹோமாகம, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகிய பகுதிகள் ஊடாகப் பயணித்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று (13) மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டேஷ் கேமராக்களில், […]