பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் […]

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பில் மறுமலர்ச்சி ஏற்படுத்த திட்டம் – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் […]

போர்த்துக்கல்லின் கழகத்துக்குத் திரும்பவுள்ள ரொனால்டோ?

சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல் நஸாரின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கழகத்தை விட்டு வெளியேறி தனது முதற் கழகமான போர்த்துக்கல்லின் ஸ்போர்டிங்கில் இணைவாரென எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அரேபிய பொது முதலீட்டு நிதியமானது தனது கழகத்துக்கு உதவவில்லை என எதிர்ப்புத் தெரிவித்தே அல் நஸாரின் இரண்டாவது போட்டியை ரொனால்டோ தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. பருவகால முடிவில் 43 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு ரொனால்டோவைக் கைச்சாத்திடக் கூடிய சரத்து அவரது அல் நஸாருடனான ஒப்பந்தத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய உறுதி

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று மீண்டும் உறுதியளித்துள்ளது. பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின், உள்நாட்டுக்கான புதிய பணிப்பாளர் ஷானன் கவுலின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலின், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போது இது […]

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயற்படும் இந்தக் கூட்டணி, தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் […]

கனடா மிசிசாகா நகரில் பெண் ஒருவரை உலோகக் கம்பியால் தாக்கிக்கொன்ற சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்

கனடா மிசிசாகா நகரில் உள்ள டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) மற்றும் டிக்ஸி ரோடு (Dixie Road) சந்திப்புக்குஅருகில் ஒரு பெண்ணை உலோகக் கம்பியால் தாக்கிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 58 வயதான கெண்ட் மெக்கெர்ரன் என்ற நபரின் மீதான விசாரணைகள் தற்போது பீல் பிராந்திய காவல் துறையினாரால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7:40 மணியளவில் மேற்படி கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் […]

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர், தற்போது நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி, […]

இன்று கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள நேரில் வர வேண்டாம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று (13) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அவசர அறிவிப்பை நேற்று விடுத்தது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர். சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று […]