மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் விவகாரம்: நோர்வே முன்னாள் பிரதமர் மீது ஊழல் வழக்கு

அமெரிக்காவின் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் மீது “கடுமையான ஊழல்” குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாக்லாண்ட் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியபோது அவருக்கு வழங்கப்பட்டிருந்த தூதரகப் பாதுகாப்பை (Immunity) அந்த அமைப்பு நீக்கியதைத் தொடர்ந்து, நோர்வேயின் பொருளாதாரக் குற்றப்பிரிவு’ இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ உள்ள மின்னஞ்சல்களின்படி, எப்ஸ்டீன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் ஜாக்லாண்ட் […]
வடகொரியாவின் அடுத்த வாரிசை அறிவித்தார் கிம் ஜொங் உன்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ-வை தனது அரசியல் வாரிசாக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அரச விழாக்களில் ஜு ஏ-வின் பங்களிப்பு அதிகரித்துள்ளதையும், அவர் முக்கியக் கொள்கை முடிவுகளில் தனது கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டி, அவர் இப்போது “வாரிசு நியமனம்” எனும் நிலையை எட்டியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் சீனாவுக்குத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை […]
பாடசாலையில் இரசாயனம் கலந்த காற்றை சுவாசித்த 13 மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை

மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இரசாயனம் கலந்த காற்றை சுவாசித்ததில் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளின் நிலை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கும் மகன்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை தவறாக பயன்படுத்தியதாக நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் ஜோஹான் பெர்னாண்டோ, அவரது இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் […]
சிறுமி துஷ்பிரயோகம்: திருமணமானவர் கைது

13 வயது 7 மாதங்களேயான சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக திருமணமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை கோனகனார காவல் பிரிவில் 9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியான சிறுமி பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். திருமணமான நபர் சந்தேகத்தின் பேரில், வியாழக்கிழமை (12) அன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் 37 வயதுடையவர் ஆவர், அந்த சிறுமி, தனது தாய், தந்தை மற்றும் தம்பியுடன் வசிக்கிறார். சிறுமியின் தாய் 2025 டிசம்பர் 31 […]
ஹட்டனில் நகை கொள்ளை: சந்தேகநபருக்கு பிணை

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் சுகததாசவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதன் போது அவரால் களவாடப்பட்ட 9 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஹட்டன் […]
வீட்டின் மீது கணவன் வீசிய பெட்ரோல் குண்டு; மனைவி மரணம்

வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ஏகநாயக்க (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தம்பதியினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கணவர் வௌ்ளிக்கிழமை (13) அன்று வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக பொலிஸார் தெரிவித்தனர். பெட்ரோல் குண்டினால் வீடு தீப்பிடித்து எரிந்ததோடு, மனைவி வீட்டினுள் தீப்பிடித்து இறந்தார். […]
காட்டுயானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியது. இதன்போது வாழைச்சேனை நகரில் ஊடுருவிய போது இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டி காட்டுயானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டுயானைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த […]
ஜனாதிபதியின் நலனுக்காக விசேட வழிபாடு

தேயிலைக் கொழுந்தினைப் பறித்து, கரடுமுரடான கரங்களைத் தொட்டுப்பார்த்து, ஆதங்கத்தோடு தொழிலாளர்களின் நிலையைக் கேட்டறிந்த ஜனாதிபதியை இதுவரை காலத்தில் நாங்கள் கண்டதில்லை. கடந்த காலத்தில் பல போராட்டங்களுக்கும் மத்தியிலேயே எங்களுடைய சம்பள அதிகரிப்பை, அதுவும் சிறிய தொகையை மலையக அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுத்தனர். ஆனால், எவ்வித போராட்டமும் இன்றி சம்பளத்தை அதிகரித்துத் தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதண்டி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். […]
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய சிம்பாப்வே

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் தற்போது முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் சிம்பாப்வே வென்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56), தடிவனஷே மருமனியின் 35 (21), றயான் பேர்ளின் 35 (30), அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் ஆட்டமிழக்காத 25 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. […]