“மக்களை ஏமாற்றும் செயல்” பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பாக, “மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத […]
மோசடியான பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் – ஷேக் ஹசீனா

முகமது யூனுஸ் நடத்திய மோசடியான பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் தேர்தல் வியாழக்கிழமை (12) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர்கள் இல்லாத, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான தேர்தலை இரத்து செய்ய வேண்டும். முகமது யூனுஸ் பதவி விலகுவதுடன், பொய்யான வழக்குகளை […]
உக்ரேனில் மின்சார கட்டமைப்பு பாதிப்பு

ரஷ்யா வியாழக்கிழமை இரவு முழுவதும் உக்ரேன் மீது ட்ரோன்கள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளமையினால் மின்சார கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேனின் மொத்த மின் உற்பத்தித் திறனில் சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை தற்போது செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனில் தற்போதைய வெப்பநிலை -15°C முதல் -20°C வரை குறைந்துள்ள நிலையில், மின்சாரம் இல்லாதது மக்களைப் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தலைநகர் கீவ் மற்றும் ஒடெசா போன்ற […]
ஜப்பானிய அதிகாரிகளால் சீன மீன்பிடி படகு கைப்பற்றல்!

ஜப்பானிய அதிகாரிகளால் சீன மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் ஆசியாவின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் நாகசாகி மாகாணத்திற்கு உட்பட்ட பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வியாழக்கிழமை (12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 47 வயதான படகின் கேப்டன் ஜப்பானிய மீன்பிடி திணைக்கள அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி தப்பியோடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் தென் கொரியா […]
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் மீண்டும் குறைந்த அழுத்த தாழ்வு

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி குறைந்த அழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) காலை 10.30க்கு வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான […]
நிலுவையிலுள்ள வரிகளை அறவிட நடவடிக்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிகளை அறவிட நடவடிக்கை மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரி நிலுவைகளை அறவிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரிகளை அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான […]
இறக்குமதி வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறியப்படுத்தினார். இது 2026 வரவுசெலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரியாகும். இந்த வரி அறவீடானது சுங்கத் திணைக்களத்திலேயே மேற்கொள்ளப்படும். தற்போது சுங்கத்தில் விடுவிப்புச் செயற்பாடுகளில் உள்ள வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது. வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால், […]
அமெரிக்காவின் மினசோட்டாவில் குடியேற்ற அமுலாக்க நடவடிக்கை

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த தீவிர குடியேற்ற அமுலாக்க அதிரடி நடவடிக்கை முடிவுக்கு வருவதாக ஜனாபதி டொனால்ட் ட்ரம்பின் எல்லை விவகாரங்களுக்கான விசேட அதிகாரி டொம் ஹோமன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் ஒப்புதலுடன் இந்த அதிரடி சோதனைகள் நிறுத்தப்படுவதாகவும், இதற்கான அதிகாரபூர்வ விலக்கல் பணிகளை மேற்பார்வையிட தாம் இன்னும் சில நாட்கள் மினசோட்டாவில் இருக்கப்போவதாகவும் ஹோமன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 4,000க்கும் மேற்பட்ட ஆவணமற்ற குடியேறிகள் கைது […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பார்வை இழப்பு?
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானை, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சப்தர் நேரில் சந்தித்து ஆய்வு செய்தார். அதன் பின் அவர் தாக்கல் செய்த 7 பக்க அறிக்கையில், கடந்த மூன்று மாதங்களாக இம்ரான் கான் கண் பார்வையில் மங்கல் மற்றும் தெளிவற்ற […]