யாழ். மாநகர சபையில் பிரேரணையைக் கிழித்தெறிந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வில், அப்பிள் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் பிரேரணையைக் கிழித்தெறிந்து சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். யாழ். மத்திய பேருந்து நிலையச் சூழலில் அமைந்துள்ள அப்பிள் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று காலை மாநகர சபை முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய சபை அமர்வின் போது இவ்விடயம் […]

வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டம்

ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி உள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று(12.02.2026) வடக்கு மாகாண சுற்றுலா துறையினர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையினர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அப்பகுதிகளில் நிலவும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 01. புதிய ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள்: பயணிகளின் வசதிக்காக ஊர்காவற்றுறை கடவுக்கரை (Jetty) […]

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக […]

இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் […]

மூவருக்கு மரண தண்டனை விதிப்பு

வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008 அக்டோபர் 23ஆம் திகதியன்று வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றின் போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். களுத்துறை நீதவான் […]

த.வெ.க கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறலால் சூரஜ் உயிரிழந்தார். கூட்டத்தில் பங்கேற்ற போது வலிப்பு ஏற்பட்ட தவெக நிர்வாகியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம்

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சட்டமூலம் குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு: ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின்படி, போர்த்துக்கலில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இனி சமூக வலைத்தளங்களை தடையின்றிப் பயன்படுத்த முடியாது. குறிப்பாக இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளைப் பயன்படுத்துவதற்கு பெற்றோரின் “தெளிவான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி” கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய […]

கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகள் மிகவிரைவில் கட்டுப்பாட்டிற்கு வரும் – அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரி இன்று (13) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் மனுவினை கையளித்துள்ளார்கள். இதன் பின்னர் கடற்தொழிலாளர்களுக்கு கருத்துரைத்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழில் துறையில் மாவட்டத்தில் 20 வீதமான மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் 71 கிலோமீற்றருக்கு மேல் கடல்வளம் உள்ளது மாவட்டத்தில் உள்ள பிரச்சினை இந்த மீன்வளம் சட்டவிரோதமான முறையில் வளம் அழிக்கப்படுகின்றது. இதில் […]

பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

பாடசாலை மாணவர்களின் பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு 2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளை மறுதினம் (15) முடிவடையவிருந்த போதிலும், தற்போது அது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்ட வழக்கைத் தொடர்வது பயனற்றது?

உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு மேலும் நிவாரணம் வழங்க முடியாது என்றும், வழக்கைத் தொடர்வது பயனற்றது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உமா ஓயா திட்டம் இலங்கையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செயல்முறையை முறையாகப் பின்பற்றாமல் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதி மையம் தெரிவிக்கிறது. உமா ஓயா பகுதியில் வசிப்பவர்கள் சார்பாக சுற்றுச்சூழல் நீதி மையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்தது, மேலும் இந்த வழக்கு […]