பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு; அரசு வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுகிறது! – ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுவதாகவும், தொழிலாளர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விரிவாக விளக்கமளித்தார். கடந்த ஜனவரி 30ஆம் திகதி அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி அடிப்படைச் சம்பளம் ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகையாக […]

முன்னேறியுள்ள இலங்கை வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று(11) வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலின்படி சிம்பாப்வே அணித்தலைவர் சிக்கந்தர் ராசா மீண்டும் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். கொழும்பில் ஓமானுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில், 4 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், அதிரடியாக விளையாடி வெற்றி ஓட்டங்களையும் பெற்றார். இந்த சிறப்பான ஆட்டமே அவரை மீண்டும் முதலிடத்திற்கு ஏற்றியுள்ளது. மேலும் துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசையில் இந்திய அணியின் […]

வேலைவாய்ப்பு மோசடி செய்த தம்பதி கைது!

வெளிநாடு தொழில் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்ககளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒருகோடி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்த கணவன் மனைவி தம்பதிகள் சீதுவ பிரதேசத்தில் இருந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர். ரைன்போ னெக்கஸ் என்ற பெயரில் பணியகத்தினால் அனுமதிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோசடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை மேற்கொண்டு சென்று, பெண் ஒருவரிடமிருந்து 40 இலட்சம் […]

ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அறிவித்தல்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த […]

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வாய்ப்பில்லை – அரசாங்கம்

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து […]

இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை ஆகியவை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள ‘நீதி எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறுகிறது’ என்ற சிறந்த கட்டுரையின் பகுதிகளைப் பகிர நான் முடிவு செய்தேன். ஏனெனில், இது இலங்கை […]

ஹர்ஷன நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகும். சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் இந்த செயற்பாடு குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாட்டு தகவல்களை எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு […]

நீரில் மூழ்கி சுமார் 388 பேர் 2025 இல் உயிரிழப்பு

ட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நீரில் மூழ்கி சுமார் 388 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் இடம்பெறும் விபத்துகள் வெகுவாக அதிகரித்து […]

சர்வதேச விமான நிலையத்தில் விலங்கு தோல்களுடன் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் 37 வயதுடைய வர்த்தகர் ஒருவர் நேற்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டார். சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், முதலை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வனவகைகளைச் சேர்ந்த 19 உலர்த்தப்பட்ட தோல் பகுதிகள் மீட்கப்பட்டன. தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளில் மறைத்து கொண்டு வந்த இத்தோல்களை ‘ஆடைகள்’ எனத் தெரிவித்து அதிகாரிகளைத் […]