அரச வைத்தியசாலைகளில் தாதியர்கள் பற்றாக்குறை?

அரச வைத்தியசாலைகளில் 20,000 தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.அத்தோடு தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு இணங்காத சுகாதார அமைச்சர் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அரசாங்க தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். பொரல்லவிலுள்ள அரசாங்க தாதியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (10.02.2026) ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்,விடுமுறையில் வெளிநாட்டில் தாதியர் தொழிலைத் தொடரும் வாய்ப்பு இரத்துச் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக, […]
அல்லைப்பிட்டி பொலிஸ் துப்பாக்கி சூடு; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு

அல்லப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் குறித்த தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவல்துறை பொலிஸ் உத்தியோதர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி […]
இலஞ்ச, ஊழல் விசாரணைக்காக சபாநாயகர் பதவி விலகத் தேவையில்லை!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏதேனும் தீர்மானம் எடுத்துள்ளதா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]
மூதூர் – குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவுதினம்!

மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வை நேற்று(11.2.2026) குமாரபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ,மலர்தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது. குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட குமாரபுரம் மக்களினால் வேலன் சுவாமிகளிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு […]
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டம் பெரிய அபிவிருத்தி அடையும் – ஆளுநர் நா.வேதநாயகன்

வளம் நிறைந்தும் வறுமையில் முதலிடம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக மிகப் பெரிய அபிவிருத்தியை அடையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11.02.2026) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய […]
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த குழுவின் கூட்டத்தில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார். “அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ கொள்கைப் […]
கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்த கடந்த வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல் நான்கு மாதங்களுக்குள் 598,250 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார். இலங்கை கடற்படையானது வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் […]
பாலஸ்தீனர்களின் இனப்பரம்பலை மாற்றுவதற்கு இஸ்ரேல் முயற்சி – ஐநா குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களின் இனப் பரம்பலை மாற்றுவதற்கு, இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மைய நடவடிக்கைகள் யூத இஸ்ரேலியர்கள் எளிதாக நிலம் கையகப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாலஸ்தீனர்களின் கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் அடங்கிய பரந்த நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்புக்களை விஸ்தரிகக் முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகள் அமல்படுத்தப்பட்டால், பாலஸ்தீனர்களின் நிலங்களை பறிக்கும் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் […]
அரசாங்கம் தற்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்போவதில்லை

கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துவரும் அரசாங்கம் இந்நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தினால் படுதோல்வியடையும் என்பது தெரியும். அதனால் அரசாங்கம் தற்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மக்களின் நன்மதிப்பை தற்போது இழந்து வருகிறது. இதற்கு உதாரணம்தான், இடம்பெற்றுவரும் கூட்டுறவு சங்க தேர்தல்களாகும். அண்மையில் […]
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்கள் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு இன்று (11) நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் மற்றும் அதற்கான புதிய சட்ட வரைவு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் சம உரிமை தொடர்பான […]