தமிழகத்தில் 82,664 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 12) தொடக்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் (Conversion Conclave), ரூ. 36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. […]
சென்னையில் பறவை காய்ச்சலால் கோழி இறைச்சி விலை கடும் சரிவு!

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது. மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும். தொற்றுநோய் பரவலைத் தடுக்க […]
அல்லைப்பிட்டியில் சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று (12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மன்னாரில் புதிய நியமனங்கள்

மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (EDO) கடமை ஆற்றிய 34 பேருக்கு நேற்றைய தினம் (11.2.2026) “சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்’ (CO) நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (DO) கடமையாற்றி வந்த 34 பேர், கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சிற்கு மாற்றப்பட்டு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக (CO) நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமன கடிதங்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மன்னார் […]
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் – ஜனாதிபதி

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார். இன்று (11) பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய […]
இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய (11) போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரதபோர்ட் 42 பந்துகளில் 76 ஓட்டங்களை […]
கடன் சுமையால் கனடாவின் மத்திய அல்பெர்டாவில் ஒரு நகரம் திண்டாட்டம்!

கனடாவின் மத்திய அல்பெர்டாவில் உள்ள ஒரு நகரம், கடன் சுமையால் மூழ்கி தனது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளது. நகரத்தை கலைத்து, ஸ்டர்ஜன் கவுண்டியில் இணைக்கும் வாய்ப்பை நகர நிர்வாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஸ்டர்ஜன் கவுண்டியின் புவியியல் எல்லைக்குள் அமைந்துள்ள கிபன்ஸ் நகரம், தொடர்ச்சியான தவறான நிதி முடிவுகளால் தனது எதிர்காலத்தை இழந்த நிலையில் திவாலாவதற்குத் துரிதமாக நகர்கிறது என நகரத்தின் மேயரும் நகரசபையும் தெரிவிக்கின்றனர். இடைநிலை முதன்மை நிர்வாக அதிகாரி டிம் டுஹாமெல் […]
நேட்டோவுக்கு கனடாவின் வேண்டுகோள்!

நேட்டோ சமீபத்தில் தொடங்கிய ஆர்க்டிக் முனைப்புத் திட்டம், மேற்கத்திய இராணுவ கூட்டணியின் செயல்பாடுகளில் நிரந்தர அம்சமாக மாற வேண்டும் என்று கனடாவின் வெளிநாட்டு அமைச்சர் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார். அனிதா ஆனந்த், அடுத்த இரண்டு நாட்களுக்கு டொராண்டோவில் நடைபெறும் Arctic 360 மாநாட்டின் தொடக்க உரையை நிகழ்த்தியிருந்தார். நேட்டோவின் தளபதி, Arctic Sentry எனப்படும் இந்த முனைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அது தூர வட பகுதியில் கூட்டணி நாடுகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முழுமையான கட்டமைப்பை வழங்கும் என்றும் […]
புயல் நிவாரணப் பகிர்வு தொடர்பாக நிலவும் முரண்பாடு; ஊடகவியலாளர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் புயல் நிவாரணப் பகிர்வு தொடர்பாக நிலவும் முரண்பாடுகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஊடகவியலாளர் இன்று (11.2.2026) பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். தனியார் வானொலி மற்றும் ஊடக நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் குறித்த ஊடகவியலாளர் மீது, மூதூர் பிரதேச செயலாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் […]
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண கொலைச் சம்பவத்தில் பிராம்ப்டன் நகர மன்றத்தில் அரைக் கம்பத்தில் கொடி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வகையில், பிராம்ப்டன் நகர மன்றத்தில் ஏற்றப்பட்ட கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பிராம்ப்டன் மாநகராட்சி தெரிவித்துள்ளது. கனடா முழுவதும் அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் மேற்படி பொதுத் துயரத்தில் பிராம்ப்டன் நகரமும் இணைந்து கொள்கின்றது என பிராம்ப்டன் மாநகராட்சி […]