டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 16-வது லீக் போட்டியில் ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் தலைவர் […]

பாடசாலை பாதுகாப்பு சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து

ரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்று மதில் சுவரில் மோதியதாலேயே அது இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில் அதனருகில் நின்ற மூன்று மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகப் […]

‘கல்விச் சபை’ ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – ஹரிணி அமரசூரிய

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு இன்று வியாழக்கிழமை (12) மேற்கொண்ட கல்வி சார்ந்த விஜயத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில் , பிரதமர் ஹரிணி அமரசூரிய பெலியத்த ருஹுணு விஜயபா தேசிய பாடசாலை மற்றும் அதன் ஆரம்பப் பிரிவுக்குச் சென்று, 2026 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய […]

மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி பதவி நீக்கம்!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி தனது பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானத்திற்கு மாறாக சோஹாரா புகாரி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக தனது வாக்கை அளித்திருந்தார். இந்தச் செயற்பாடானது கட்சி ஒழுக்கத்தை மீறும் செயல் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி […]

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை (12) கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றையதினம் இரவு 11.00 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இந்த காலகட்டத்தில் 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், […]

அவசர எச்சரிக்கை; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் போலி சலுகைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் நம்பகமான புகைப்படங்கள் அடங்கிய ஒரு போலி செய்தி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் (முகநூல்) பரவி வருவதாக அறியப்படுகிறது. அது, தங்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டவை அல்ல என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் என்பவற்றை வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக ஊடகங்களினூடாக கேட்பதில்லை. […]

விசேட சுற்றிவளைப்பு ; 13 பேர் கைது!

கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் இன்று வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குலான பொலிஸார் மற்றும் கடற்படை இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 13820 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலான […]

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது. ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு எடுத்திருக்கும் மிக முக்கிய நடவடிக்கையால் கிட்டத்தட்ட 100 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், இன்று ரஷிய அரசு, அந்நாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலிலும் வாட்ஸ்ஆப்பை நீக்கியிருக்கிறது. அந்நாட்டு மக்கள் உள்நாட்டுத் தயாரிப்பு செயலிகளைப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்கும் […]

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பதவி நீக்கக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தாக்கல் செய்துள்ளார். மேலும், தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் காந்தி, எப்ஸ்டீன் கோப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்புபடுத்தி […]

இந்தியா 114 ரஃபேல் விமானங்களை வாங்குகிறது!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வருகை தரும்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து வருகின்றது. அந்நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படை பயன்படுத்தி வருகின்றது. இதனிடையே, கடந்தாண்டு […]