வைத்தியர் சுசில் ரணசிங்ஹ கிளிநொச்சி விஜயம்

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹ இன்று(12.02.2026) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி – இரணைமடுக்குளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ள குளத்தை பார்வையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, காக்கா கடைச் சந்தியிலுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டுள்ளதுடன், குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா வீடமைப்பு செயற்பாடுகளை விவேகானந்த நகர் பகுதியையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் விமானம் இரண்டாக உடைந்தும் 55 பேர் உயிர் தப்பினர்

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் விமானி மிகுந்த சாமர்த்தியத்துடன் செயல்பட்டு, விமானத்தை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். விமானத்தில் 5 ஊழியர்கள் உட்பட மொத்தம் 55 பேர் பயணம் செய்துள்ளனர். இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தை […]
வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல்: நிர்வாகி ஒருவர் உயிரிழப்பு

வங்கதேசத்தின் குல்னா சாதார் பகுதியில் ஆலியா மதரசா வாக்குச்சாவடியில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வங்கதேச தேசியவாத கட்சியை (பிஎன்பி) சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பிஎன்பி கட்சியின் குல்னா மெட்ரோபாலிட்டன் பகுதியின் முன்னாள் செயலாளர் மொஹிபுஸாமன் கொச்சி தாக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (12) காலை இரு குழுக்களிடையே விவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது, மொஹிபுஸாமன் கொச்சிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் உயிரியல் அடிப்படைக்கு புறம்பாக விருப்பத்திற்கேற்ப அறுவைசிகிச்சை மூலம் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமை தொடர்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள கடந்த அரசாங்கங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் சட்டவிரோதமானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு […]
அமெரிக்காவில் பௌத்த துறவிகளின் ‘அமைதி நடைப்பயணம்’

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள ‘அமைதி நடைபயணம்’ (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர். லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட […]
மஸ்கெலியா கவரவில தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு அனுமதிப்பதாகக் கடிதத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி, கவரவில தோட்டத்தைச் சேர்ந்த எட்டு தொழிலாளர்கள் தமக்குப் பணி இடைநீக்கம் வழங்கப்பட்டமையானது தோட்ட முகாமையாளரின் பழிவாங்கும் செயல் எனக் குற்றஞ்சாட்டி, அதற்கு நீதி கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். […]
இலங்கை – சவுதி அரேபியா பாதுகாப்புத் தலைவர்கள் சந்திப்பு!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அய்யாஃப் அல்-முக்ரின் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்பு கண்காட்சிக்கு இணையாக இச்சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீண்டகால உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பல வருடங்களாக சவுதி அரேபியா வழங்கிய […]
முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் வழக்கு விசாரணைகள் நிறைவு!

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று (12) தீர்மானித்துள்ளது. இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சத்தியக்கடதாசியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டும், மனுதாரர் தரப்பின் இணக்கத்துடனும் மனு மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் […]
கனடா துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் 18 வயதுடையவர் ?

கனடாவின் மேற்கு மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்ததோடு, 25 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய நபர் சந்தேகநபராக பொலிஸாரால் அடையாள காணப்பட்டுள்ளார். சந்தேக நபரான ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார் என்கின்ற இந்த நபர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் தனது வீட்டில் தாய் […]
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பெயரை பயன்படுத்தி மோசடி
ற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றை ஒரு நபர் அல்லது குழுவினர் இந்த நாட்களில் பொதுமக்களுக்கு அனுப்பி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abesekara. Director of the Criminal Investigation Department (CID), Colombo 07, Sri Lanka, NationWide Could, Protection 24/7) எனப் போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றையே […]