இலங்கையும் இந்தியாவில் நடைபெறவுள்ள பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க விஜயம்

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான 13வது மிலன் மற்றும் சர்வதேச போர்க்கப்பல் மதிப்பாய்வு பெப்ரவரி 17 முதல் 25 வரை, இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்திய கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறுவதுடன், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு இலங்கை கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் சாகர மற்றும் ஐஎன்எஸ் நந்திமித்ர, இந்தப் பயிற்சியில் பங்கேற்க புதன்கிழமை (11) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. “தோழமை, ஒற்றுமை ஒத்துழைப்பு” (Camaraderie Cohesion […]
“உரிமைகள், நீதி, செயல்” எனும் தொனிப்பொருளில் 2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா

2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின தேசிய விழாவை இம்முறை மாத்தறையில் நடத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிற்கான உலகளாவிய கருப்பொருளாக “உரிமைகள், நீதி, செயல், அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக” என்பதை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச கருப்பொருளுக்கமைய இலங்கையின் தேசிய மட்டத்திலான பிரதான கொண்டாட்டங்களை மாத்தறை ருகுணு பல்கலைக்கழகத்தின் […]
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு; கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு, அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து உண்மையான பாதுகாப்பை ஒருபோதும் உறுதிசெய்யமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு […]
விஜயதாஸவின் பேச்சுக்கு நளிந்த பதிலடி
ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ச கூறுவது நகைப்புக்குரியது மக்களால் பலமான ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை யாராலும் அவ்வளவு எளிதாக அசைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. எனினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதே […]
மாணவனின் துப்பாக்கிச் சூட்டில் அதிபர் பலி; தாய்லாந்தில் சம்பவம்

தாய்லாந்து- ஹட் யாய் (Hat Yai) நகருக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அதிபர் உயிரிழந்துள்ளார். இன்றையதினம்(12.2.2026) மாலை பாடசாலை முடிவடையும் நேரத்தில் 18 வயது இளைஞன் ஒருவனால், அதிபரும் மாணவியொருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இதன்போது, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மாணவி தற்போது சீரான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் அந்த இளைஞன் கைது […]
வடக்கில் மக்களின் காணிகளை தேவையின் அடிப்படையில் விடுவிக்க முடியும்

வட மாகணத்தில் படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள மக்களின் காணிகளை தேவையின் அடிப்படையில் விடுவிக்க முடியுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். படையினரின் சம்மதத்துடன் இதற்கான நவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அறுபது மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அரசாங்கம் அதிக நிதியை வழங்கியுள்ளது. தித்வா சூறாவளியால் பாதிப்புற்ற மக்களுக்கும் அதிகளவான நிவாரண […]
டிட்வா புயலுக்கு பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலுக்கு பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை அதிகரித்துள்ளதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் என்.எம் ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12.2.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மன்னார் தொடக்கம் தெற்கு பகுதியாக இருக்கின்ற சௌத்பார்,வங்காலை,சிலாபத்துறை,முள்ளிக்குளம் அகிய கடற்பகுதிகளுக்கு தற்போது இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை அதிகரித்துள்ளது. இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக நாங்கள் அரசுக்கு பல்வேறு விடயங்களை தெளிவு படுத்தினாலும்,அரசாங்கம் குறித்த […]
இடவசதி இல்லாமையினால் சடலங்கள் வைத்தியசாலையின் வராந்தாவில்…

தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் சடலங்களின் மீது ஐஸ் கட்டிகளை அடுக்கி, அவற்றை பிணவறைக்கு முன்னால் உள்ள வராந்தாவிலேயே வைக்கும் அவலநிலை காணப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இடவசதி இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலியத்த, நாக்குலுகமுவ, ரன்ன, அங்குணகொலபெலஸ்ஸ, வீரகெட்டிய போன்ற பிரதேச மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் உயிரிழப்பவர்கள் மற்றும் விபத்துக்களில் பலியாகும் நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் பரிசோதனைகள் நிறைவடையும் வரை சடலங்கள் அங்கேயே […]
நேபாளத்தை வென்றது இத்தாலி

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது முடிவுக்கு வந்த நேபாளத்துக்கெதிரான குழு சி போட்டியில் இத்தாலி வென்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம், அலி ஹஸன், கிறிஷன் கலுகமகே (3), ஜெ.ஜெ. ஸ்மட்ஸ், பென் மனென்டி (2), ஜஸ்பிறீட் சிங்கிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே பெற்றது. ஆரிஃப் ஷெய்க் 27 (24), அணித்தலைவர் றோஹித் பெளடெல் 23 (14), […]
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் பெரும் தொகை போதைப் பொருட்களுடன் இருவர் வாகனமொன்றில் நடமாடுவதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி […]