போதைப்பொருள் கடத்தல்; தீகல சமனின் 2 கோடி பெறுமதியான வீடு முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறையில் உள்ள தீகல சமன் எனப்படும் அஜித் பெரேரா என்பவரின் சொகுசு வீடொன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது. 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குறித்த வீடு, அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டை அவர் தனது கள்ளக்காதலிக்கு கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரால் அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக பணம் பெற்ற வழியை தெளிவுபடுத்த முடியாமல் போனதால், அது போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் […]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரள படுகொலை; 12 பேருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவந்த கொடவெல ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய விசேட அமர்வினால் இந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. கடந்த […]

பெற்றோரின் நச்சரிப்பால் பாடசாலை மாணவன் தற்கொலை?

களுத்துறையில் பெற்றோரின் எச்சரிக்கையை தாங்க முடியாமல், 13 வயது பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிபென்ன, ஹொராவல பகுதியைச் சேர்ந்த, மத்துகம பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவன் தலைமுடியை வெட்டுவது குறித்து பெற்றோரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், மனமுடைந்த மாணவர் கடிதம் எழுதி வைத்த நிலையில் […]

வனிந்து ஹசரங்கவிற்குப் பதில் துஷான் ஹேமந்த!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து, உபாதை காரணமாக விலகியுள்ள சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்கவிற்குப் பதிலாக, துஷான் ஹேமந்தவை அணியில் இணைத்துக்கொள்ளச் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அனுமதி வழங்கியுள்ளது. துஷான் ஹேமந்த இதுவரை 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 3 இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது வனிந்து ஹசரங்க காலில் உபாதைக்கு உள்ளானார். […]

ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மருந்துகளின் இருப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது மிகவும் முக்கியம் – ஹன்சகா விஜேமுனி

ஒவ்வொரு வைத்தியசாலையில் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது மருந்து மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், இது தலைமை மருந்தாளுநருக்கு வைத்தியசாலையில் கிடைக்கும் மருந்துகளின் அனைத்து விவரங்களையும் வழங்க வாய்ப்பளிக்கிறது என்றும், மருந்து பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பு அதைக் கண்டறிந்து, வைத்தியசாலை இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு, உள்ளூர் கொள்முதல் செய்வதன் மூலம் வைத்தியசாலையில் மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க மருந்து மறுஆய்வுக் கூட்டங்கள் மிகவும் முக்கியம் என்றும் சுகாதார […]

உலக அரங்கில் ஒரு வலிமையான ‘அதிகார சக்தியாக’ ஐரோப்பா உருவெடுக்க வேண்டும்

ஐரோப்பா, இனி ஒரு வெறும் வர்த்தகச் சந்தையாக மட்டும் இல்லாமல், உலக அரங்கில் ஒரு வலிமையான ‘அதிகார சக்தியாக’ (World Power) உருவெடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையிலும், அமெரிக்கா தனது பாதுகாப்பு உத்தரவாதங்களிலிருந்து விலகிச் செல்லும் சூழலிலும், ஐரோப்பா ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார். பாதுகாப்பு, தூய்மையான வலுசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முதலீடு […]

அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூடு; வெளியானது அநுர தரப்பின் நிலைப்பாடு

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(10.02.2026) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில், அல்லைப்பிட்டி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த ஹயஸ் […]

போராட்டங்கள் இன்றி சம்பள உயர்வு – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, வீதிப் போராட்டங்களோ அல்லது தொழிற்சங்க வேலைநிறுத்தங்களோ இன்றி, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆகக்கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். வெலிமடை பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு நேரில் சென்று, தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல்களை நேரில் ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் வெறும் 10 ரூபாய் சம்பள உயர்வுக்காகவும் தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதை நிறுத்தி வீதியில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது […]

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை; உதவத் தயார் மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மன்னர் சார்ள்ஸ் அறிவித்துள்ளார். அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 30 இலட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில் அண்ட்ரூ குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன: 2010-ஆம் ஆண்டு அண்ட்ரூ இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவராக இருந்தபோது சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ […]

ஈராக்கில் உயர் பாதுகாப்பு அதிகாரிக்கு மரண தண்டனை!

ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சியின்போது அவருக்கு மிக நெருக்கமான, உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இருந்த சாதுன் சப்ரி அல்-கைசிக்கு (Saadoun Sabri al-Qaisi) எதிரான கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கமைய, அல்-கைசிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈராக் தேசிய பாதுகாப்பு அமைப்பு திங்கட்கிழமை (9) அதிகாரபூர்வமாக அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இராணுவ உயரதிகாரியாக இருந்த அல்-கைசி, அப்போது இடம்பெற்ற பல கொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்துள்ளதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், […]