ரணிலின் செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் விளக்கமறியல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் புதன்கிழமை (11) அன்று பிறப்பிக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமன் ஏக்கநாயக்க, புதன்கிழமை (11) அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்வதற்காக ஜனவரி […]

குழந்தை புற்றுநோய் நோயாளிகள் நாட்டில் அதிகரிப்பு!

நாடு முழுவதும் ஒரு வருட காலத்திற்குள் மொத்தம் சுமார் 900 குழந்தைகள் புற்றுநோய்யால் பதிவாகியுள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குழந்தை புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் வழங்க சுகாதார அமைச்சருடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் மருத்துவர் சூரஜ் பெரேரா கூறியுள்ளர். மேலும், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டை செயல்படுத்துவதிலும் சிகிச்சை விளைவுகளை […]

அயர்லாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற அயர்லாந்துடனான குழு பி போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 182/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 45 (29), ஜொஷ் இங்லிஸ் 37 (17), மற் றென்ஷோ 37 (33), கமரன் கிறீன் 21 (11), ஸ்கேவியர் பார்ட்லெட் ஆ.இ 11 (06), கூப்பர் கொனோலி […]

அரசாங்கம் நாட்டின் முக்கியமான சலக பிரிவினரையும் பகைத்து விட்டது!

அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக்கொண்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொத்மலை நியம்கம்தொர புராண ரஜமஹா விகாரைக்கு இன்று (11) விஜயம் செய்த போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். செல்லும் இடமெல்லாம் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு உதவி வழங்கப்படுவதாயின், அது முழுமையாக அரசியல் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. […]

ஜனாதிபதி அரச ஊழியர்களிடம் கோரிக்கை

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் […]

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்குப் பிணை

பிணையில் விடுவிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களும் நீதிமன்றில் இருந்து வௌியேறியுள்ளனர். திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டது. திருகோணமலையிலுள்ள […]

தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த கலந்தாலோசனையும் செய்யாமல் அரசியல்குழு பாராளுமன்ற குழு தலைவரை தெரிவுசெய்து தங்களிடம் செய்தியாக தெரிவித்ததாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். எட்டுப்பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்தே பாராளுமன்ற குழு தலைவரை தெரிவுசெய்ததாகவும், ஆனால் தற்போது அதனை அரசியல்குழு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெல்லாவெளியில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை […]

எமது ஆட்சியில் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படாது!

வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். வெல்லாவெளியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக்காலத்தில் இனப்பரம்பலை மாற்றும் சட்ட விரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் எமது ஆட்சிக்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது என தெரிவித்தார்.

சிறுவன் சுட்டுக் கொலை: சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்று (11) வட்டுக்கோட்டை – இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என ஜனாதிபதியும் சொல்லியிருந்தார். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் அதை எடுப்போம். […]

2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார். வாக்காளர்கள் தகுதி பெறும் திகதியாக பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கருதப்படுவதாகவும், அத்திகதியில் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்பதை உறுதிப்படுத்தியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளும் வசதி காணப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியலுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரிக்கும் முறை மற்றும் […]