உடுத்துறை- வேம்படி வீதி வளைவால் ஆபத்து

யாழ்.வடமராட்சி கிழக்கு, உடுத்துறை வேம்படி வீதி சந்தி விபத்து ஏற்படும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடுத்துறை-வேம்படி சந்தியின் வளைவு பகுதியை குறிக்கும் வீதிக் குறியீடுகள் அமைக்கப்படாமையே இந்த ஆபத்திற்கு காரணமென அந்த வீதியால் பயணம் செய்யும் பயணிகள் தெரிவிக்கின்றனர். வீதிக் குறியீடு இல்லாத குறித்த ஆபத்தான வளைவில் அண்மைக்காலமாக பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக வேம்படி சந்தி வளைவு பகுதியில் வீதி குறியீடுகளை அமைத்து விபத்துக்களை தவிர்க்குமாறு அதிகாரிகளை மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய (11) போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரதபோர்ட் 42 பந்துகளில் 76 […]

என்னை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அரசாங்கம் உள்ளது

தாம் பௌத்த மதத்திற்காக குரல் கொடுப்பதாகவும், புத்த சாசனத்திற்காகவும் மகா சங்கத்தினருக்காகவும் முன்னிற்பது இனவாதம் அல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தாம் சிங்கள பௌத்தராக இருந்தபோதிலும், ஏனைய கலாசாரங்கள், மொழிகள் மற்றும் மதங்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தேர்தலை நடத்துவதா, அல்லது […]

தாளையடி றோ.க.த.க. பாடசாலையில் ஒன்பது மாதங்களாக அதிபர் இல்லை

யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த பல வருடங்களாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றியவர் பணி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதன் பிற்பாடு கடந்த ஒன்பது மாதங்களாக குறித்த பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் அதிபர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தாளையடி றோ.க.த.க பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தாளையடி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை […]

யாழ் சிறுவன் படுகொலை; புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சி?

குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமை தான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சுதந்திரமாக வீதியில் நடந்து செல்லும் […]

திருடப்பட்ட மற்றும் தொலைந்த தொலைபேசிகள் தொடர்பில் அவசர அறிவுறுத்தல்

தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசி தொடர்பான முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தனிப்பட்ட புகைப்படங்கள், டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளின் உணர்திறன் தன்மையை எடுத்துரைத்து, தொலைந்து போன தொலைபேசிகளை பாதுகாக்கத் தவறினால், உரிமையாளர்களின் தகவல்கள் தவறான கைகளுக்குச் சென்றால் அவர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட நேரிடும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு.வூட்லர் கூறியுள்ளார். “இந்த தொலைபேசிகள் தொலைந்து போனாலோ […]

காட்டு யானை தாக்கியதில் சுற்றுலாப் பயணிக்குக் காயம்

கதிர்காமம் – புத்தல​ வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.45 மணி அளவில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

‘கண்ணிவெடிகளற்ற உலகிற்கான’ அறக்கட்டளை பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ‘கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை ‘(Foundation for a World Without Mines – FWWM) பிரதிநிதிகள் குழு, அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது. இந்த பிரதிநிதிகள் குழுவில், முகாமைத்துவ இணை இயக்குநர் ஐரீன் ரோனர் மற்றும் அறக்கட்டளை நிர்வாக சபை உறுப்பினர் மைக்கேல் ப்ரௌமொல்லர் ஆகியோர் இணைந்திருந்தனர். வடக்கில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் DASH அமைப்பிற்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக ஆறு […]

இந்தியாவுக்கு தேவ்னிமோரி சின்னங்கள் கொண்டு செல்லப்பட்டன

இலங்கையில் காட்சிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட “தேவ்னிமோரி” புனித சின்னங்கள், புதன்கிழமை (11) காலை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார். இப்புனித சின்னங்களை இலங்கைக்குக் கொண்டு வந்த, இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130 ரக விசேட விமானம், புதன்கிழமை (11) காலை 11.15 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டது. இப்புனித சின்னங்களை அனுப்பி வைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும […]

மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்று உயர் மின்னழுத்த மின் கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சமிந்து நிர்மால் பெர்னாண்டோ என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் செவ்வாய்க்கிழமை (10) இரவு பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்துக்கொண்டிந்த போது கொரலவெல்ல லன்சியா தேவாலயத்திற்கு அருகில் வைத்து சிறிய ரக லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து […]