பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதற்கு பாகிஸ்தான் இணக்கம் வெனியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நாம் அனைவரும் நேசிக்கும் இந்த விளையாட்டு தொடர்வதை உறுதி செய்தமைக்காக பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப்புக்கு நன்றி. கொழும்பில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், […]
மக்களின் தேவை மதிப்பீட்டை விரைந்து செயற்படுத்துமாறு – ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்தல்

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வதுடன், இதன்போது பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே வலியுறுத்தியுள்ளார். கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் மலையக பகுதிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு […]
கனடாவை வென்ற தென்னாபிரிக்கா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் தற்போது முடிவடைந்த கனடாவுடனான குழு டி போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: கனடா தென்னாபிரிக்கா: 213/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 59 (32), டேவிட் மில்லர் ஆ.இ 39 (23), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆ.இ 34 (19), றயான் றிக்கெல்டன் 33 (21), குயின்டன் டி கொக் 25 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ஷ் […]
வங்காலை கடற்பரப்பில் மீனவரின் படகை மோதித் தள்ளிய டோறா

வங்காலை கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற வங்காலை மீனவர் ஒருவரின் படகு ஒன்றுடன் நேற்று முன் தினம் (08) மாலை கடற்படையினரின் டோறாப்படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகையும் மீனவர்கள் இருவரையும் கைவிட்டு கடற்படை படகு பொறுப்பின்றிச் சென்றதால் கடலில் விழுந்த இரு மீனவர்களும் உயிருக்குப் போராடியுள்ளனர். தங்கள் உயிரைக் காக்கும் பொருட்டு நீச்சல் மூலம் மற்றுமொரு மீனவர் படகைச் சென்றடைந்த அவர்கள் காப்பாற்றப்பட்டு கரையை வந்தடைந்துள்ளனர். கடற்படையின் டோறா மோதியதில் மீனவரின் படகும் இயந்திரமும் பாவிக்கமுடியாத நிலையில் […]
முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீட பணிகளை ஆரம்பிக்க இணக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் […]
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் போட்டியிடுவார் – டி.வி.சானக

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் .அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் ராஜபக்ஷர்களின் வழக்குகளை அரசாங்கம் துரிதப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை நாழுக்கு நாள் […]
திருமலை புத்தர் சிலை விவகாரம்; அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி தேரர்களைச் சிறையில் அடைக்கிறது – பிக்குகள் கண்டனம்

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி […]